For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிருஷ்ணர் தூக்கிய கோவர்தன் மலைக்கு கிரிவலம்: 50 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

By Veera Kumar
Google Oneindia Tamil News

More than 50 lakh perform 'Goverdhan parikrama'
மதுரா: உத்தர பிரதேசத்தில் கிருஷ்ணர் அவதரித்த மதுரா நகரிலுள்ள கோவர்தன் கிரி மலைக்கு நடைபெற்ற கிரிவல விழாவில் 50 லட்சம் பக்தர்கள் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர்.

மதுராவில், கிருஷ்ணர் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. அங்குள்ள கோவர்தன் மலையை, குடையாக பிடித்து ஆயர்களை, இந்திரனின் கோபத்தில் இருந்து காப்பாற்றியதாக ஐதீகம். எனவே கோவர்தன் மலைக்கு சிறப்பு பூஜைகள் செய்து இந்துக்கள் வழிபட்டு வருகிறார்கள். கோவர்தன மலைக்கு தற்போது முதியாபூனோ என்ற விழா எடுக்கப்பட்டு வருகிறது.

இதில் பங்கேற்க பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து குவிந்துகொண்டுள்ளனர். வழக்கத்தைவிட மிக அதிகமாக பக்தர்கள் வந்துள்ளதாக விழா நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதுவரை 50 லட்சம் பக்தர்கள் கோவர்த்தன் மலையை சுற்றி பூஜை செய்துள்ளனர். கும்பமேளாவுக்கு அடுத்தபடியாக அதிகப்படியான பக்தர்கள் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவர்தன் கிரியை சுற்றும் பாதை 23 கிலோமீட்டர் தூரமாகும். திருவண்ணாமலை கிரிவலப்பாதை 14 கிலோமீட்டராகும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Braving the scorching heat, nearly 50 lakh pilgrims from different parts of the country have performed 'parikrama' (circling) of holy hillock Goverdhan during the ongoing Mudiya Poono fair in Goverdhan town. "The rush of pilgrims since last night is unprecedented. Till this evening, at least 50 lakh pilgrims have performed parikrama of Goverdhan," Mela Officer Dhirendra Sachan said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X