For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேட்பாரற்று கிடந்த செல்போன்: மும்பை ரன்வேயில் இருந்து திரும்பி அழைக்கப்பட்ட துருக்கி விமானம்

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: இன்று காலை மும்பை விமான நிலையத்தில் இருந்து இஸ்தான்புல் கிளம்பவிருந்த துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில் கேட்பார் அற்று கிடந்த செல்போனால் விமானம் ரத்து செய்யப்பட்டது.

துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 250 பயணிகளுடன் இன்று காலை 6.25 மணிக்கு மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இஸ்தான்புல்லுக்கு கிளம்பவிருந்தது. விமானம் ஓடுதளத்தில் செல்கையில் பயணி ஒருவரின் இருக்கைக்கு அடியில் கேட்பார் அற்று செல்போன் ஒன்று கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Mumbai Istanbul flight called back after Unattended Cellphone Found

இதையடுத்து விமான சிப்பந்திகள் இது குறித்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர். அவர்கள் விமானத்தை ஓடுதளத்தில் இருந்து தூரத்தில் உள்ள பார்க்கிங் பகுதிக்கு திரும்பி வருமாறு கூறினர்.

விமானம் பார்க்கிங் பகுதிக்கு வந்ததும் அதில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கிவிடப்பட்டனர். விமானத்தை முழுவதுமாக சோதனை செய்த பிறகு 11.30 மணிக்கு இஸ்தான்புல்லுக்கு கிளம்பிச் சென்றது.

இந்த சம்பவத்தால் மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
An Istanbul bound Turkish airlines flight was called back from the runway in Mumbai after an unclaimed cellphone was found under a passenger's seat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X