போலீஸ் பாதுகாப்பு வேணுமா? இனி கட்டணத்துடன் 18% ஜிஎஸ்டி வரி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: விஐபிகளுக்கும், கிரிக்கெட் போட்டிகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு கோரினால் கட்டணத்துடன் 18% ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என்று மும்பை காவல்துறை அறிவித்துள்ளது.

ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி அமலாகியுள்ளது. இனி போலீஸ் பாதுகாப்பு கோரினால் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும்.

Mumbai: Police protection will now attract 18%GST

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள், சினிமா பிரபலங்கள், பணம் ஏற்றப்பட்ட வங்கி வாகனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களுக்கு பாதுகாப்பு கேட்கப்படுகின்றனர். இதன் மூலமாக மும்பை போலீசுக்கு பெரும் வருவாய் கிடைப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வழக்கமான சட்டம் ஒழுங்கு பராமரிப்பு தவிர போலீசார் வேறு சேவை ஏதேனும் வழங்கினால் அதற்கு ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். மத்திய சரக்கு மற்றும் சேவைகள் வரி சட்டத்தின் கீழ் இந்த சேவைக்கு 18 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என்று முன்னாள் சேவைகள் வரி கமிஷனர் சுஷி சோலங்கி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஐபிஎல் சீசனுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க ரூ.75 லட்சம் வசூலிக்கப்படுகிறது. இதுபோன்ற சேவைகள் அளிப்பதன் மூலமாக மும்பை போலீசுக்கு ஆண்டுதோறும் ரூ.1.50 கோடிக்கும் மேல் கிடைப்பதாக மும்பை காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பாதுகாப்பில் சுமார் 400 போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். போலீஸ் பாதுகாப்புக்கான சேவை வரியை மாநில உள்துறை அமைச்சகம்தான் நிர்ணயிக்கிறது.

பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படும் போலீசாரின் எண்ணிக்கை, எத்தனை மணி நேரம் அவர்கள் இந்த சேவைகளை வழங்குகிறார்கள் என்ற அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்படும். இனி சேவை கட்டணத்துடன் சேவை வரியாக 18% செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது.

மும்பை மாநகராட்சி சட்டவிரோத கட்டிடங்களை இடிக்கும்போதும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. வசூலாகும் அனைத்து நிதியும் மாநில அரசின் கருவூலத்துக்கு அனுப்பப்படுகிறது என்றும் மும்பை காவல்துறை உயரதிகாரி கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
People who seek police protection will now have to shell out an additional 18%under the new tax regime
Please Wait while comments are loading...