மம்தாவை கைவிடும் இஸ்லாமியர்கள்.. ஆட்டத்தை கலைத்து போடும் ஓவைசி? மேற்கு வங்கத்தில் களநிலவரம் என்ன!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் முஸ்லீம் வாக்குகள் முக்கியமானதாக இருக்கும். அங்கு மாநிலத்தில் உள்ள வாக்காளர்களில் 27% இஸ்லாமியர்களாக உள்ள சூழலில், அவர்கள் திரிணாமுல் கட்சிக்கே வாக்களித்து வந்துள்ளனர். ஆனால், அந்த டிரெண்ட் இப்போது மாறும் சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்காலம்!
மேற்கு வங்கத்தின் அதிக முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட பகுதிகளாக முர்ஷிதாபாத், மால்டா, உத்தர் தினாஜ்பூர், பிர்பூம் போன்ற மாவட்டங்கள் கருதப்படுகிறது. இந்த மாவட்டங்களில் கணிசமான தொகுதிகள் உள்ள சூழலில், அங்கு ஒரு நுட்மான மாற்றம் ஏற்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. அங்குள்ள இஸ்லாமியர்கள் வாக்களிக்கும் முறை தான் மாறப் போவதாகச் சொல்கிறார்கள்.

முஸ்லீம்கள்
பல ஆண்டுகளாக முஸ்லிம் வாக்காளர்கள் பெரும்பாலும் திரிணாமுல் காங்கிரசுக்கு ஆதரவாகவே இருந்து வந்துள்ளனர். ஆனால், இப்போது களத்தில் ஒரு சில மாற்றங்கள் தென்படுகின்றன. இது முழுமையான கோபமோ அல்லது முற்றிலுமான நிராகரிப்போ இல்லை.. மாறாக, லேசாக எழுந்துள்ள அதிருப்தி எனச் சொல்லலாம். பொருளாதார வளர்ச்சியின்மை, ஊழல் ஆகியவை பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக உள்ளது.
ஊழல் விவகாரங்களில் அங்குள்ள முஸ்லீம்கள் விரக்தி அடைந்துள்ளனர். ஆனால், அவர்கள் கோபம் மம்தா மீது இல்லை. மம்தாவை நேர்மையான ஒரு நபர் எனச் சொன்னாலும் உள்ளூர் அளவில் நடக்கும் ஊழல்கள் இஸ்லாமியர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
பிரியும் வாக்குகள்
மறுபுறம் பாபர் மசூதி போன்ற ஸ்டைலில் மசூதி கட்ட முயன்றதால் திரிணாமுல் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஹுமாயூன் கபீர், தனியாக ஆம் ஜனதா உன்னயன் கட்சியை ஆரம்பித்துள்ளார். அவருக்கு அங்கு முஸ்லீம் இளைஞர்கள், மத குருமார்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறது. ஹுமாயூன் கபீர் மிகப் பெரிய அரசியல் கட்சியாக உருவெடுக்க முடியாது என்ற போதிலும் ஒரு சில தொகுதிகளில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம்.
இந்த ஹுமாயூன் கபூர் ஓவைசியின் மஜ்லீஸ் கட்சியுடன் இணைந்து களமிறங்குகிறது. அவர்களின் முஸ்லீம் அடையாளம் ஒரு கவனத்தைக் கொடுத்தாலும் களத்தில் இது தேர்தல் பிரச்சனையாக மாறவில்லை. மக்கள் பெரும்பாலும் வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் அன்றாட நிர்வாகத்திலேயே கவனம் செலுத்துகிறார்கள்.
எஸ்ஐஆர்
அங்கு இதைவிட இன்னொரு பிரச்சினை இருக்கிறது. ஏகப்பட்ட இஸ்லாமிய வாக்காளர்களின் வாக்குரிமையே சர்ச்சையில் உள்ளது. எஸ்ஐஆர் பணிகளில் பல இஸ்லாமியர்கள் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது. பலரது வாக்குகள் இன்னும் விசாரணை நிலையிலேயே இருக்கிறது. இது மம்தாவின் வாக்குரிமையில் ஒருவித நிச்சயமற்ற தன்மையை உருவாக்குகிறது. மால்டாவில் வாக்காளர் வரைவுப் பட்டியலில் இருந்து 18,000 வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில், 8 லட்சத்திற்கும் அதிகமான பெயர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. முர்ஷிதாபாத்தில் 11 லட்சத்திற்கும் அதிகமான பெயர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இது திரிணாமுலுக்கு எதிராகப் போகலாம்.
எஸ்ஐஆர் விவகாரத்தில் தங்களைக் காப்பாற்ற மம்தாவால் முடியவில்லை என இவர்கள் கருதுகிறார்கள். மேற்கு வங்கத்தில் சுமார் 27% இஸ்லாமிய வாக்காளர்கள் உள்ள சூழலில், தங்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் மம்தா தங்களைக் காப்பாற்றவில்லை என்றும் இவர்கள் கணிசமானோர் கருதுகிறார்கள். இதுவும் ஒரு சிக்கல்தான்!
மம்தா இமேஜ்
அதேநேரம் முஸ்லீம் வாக்காளர்கள் மம்தாவை மொத்தமாகக் கைவிட்டுவிட்டார்கள் எனச் சொல்ல முடியாது. இன்னுமே பெரும்பகுதி முஸ்லீம்கள் திரிணாமுல் கட்சியை மட்டுமே நம்புகிறார்கள். ஆனால், இஸ்லாமியச் சமூகத்தில் அங்கு அதிருப்தி குரல்கள் கேட்க ஆரம்பித்துள்ளன. மாற்றுச் சக்திகள் வலுவாக இல்லை என்றாலும் ஒரு ஆப்ஷனாக இருக்கிறது. இது எதிர்கால அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
ஆனால், எல்லாவற்றையும் விட, அதாவது திரிணாமுல் கட்சி என்பதை விட மம்தா பானர்ஜி என்ற தலைவருக்கு முஸ்லிம் வாக்காளர்களிடையே நிகரற்ற செல்வாக்கு இருக்கிறது. அவரது இமேஜ் பலரால் பெரிதும் மதிக்கப்படுகிறது. எனவே, முஸ்லீம் வாக்குகள் சிதறினாலும் கூட அது முழுமையாக திரிணாமுலை விட்டுப் போகாது.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications