'மை நேம் இஸ் கான் அன்ட் ஐ ஆம் நாட் எ டெரரிஸ்ட்': சொல்கிறார் பீகார் அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

'My name is Khan and I am not a terrorist', says Nitish Kumar's minister
பாட்னா: என் பெயர் ஷாஹித் அலி கான். நான் ஒரு தீவிரவாதி அல்ல என்று பீகார் மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநில சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் ஷாஹித் அலி கான். அவருக்கும் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஜமீல் அக்தர் மற்றும் மன்சூர் சாய்க்கும் தொடர்பு இருப்பதாக சஹஸ்த்ரா சீமா பால் என்ற எல்லை பாதுகாப்பு படை சந்தேகம் அடைந்தது. இதையடுத்து அந்த படை கானை கண்காணித்து வந்தது. இதை பார்த்த பாஜக கானுக்கும், தீவிரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளது என்று குற்றம் சாட்டியது.

இந்நிலையில் இது குறித்து விசாரணை நடத்துமாறு போலீசாருக்கு சஹஸ்த்ரா சீமா பால் கடிதம் அனுப்பியது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் கான் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொய் என்பது தெரிய வந்தது.

இது குறித்து கான் கூறுகையில்,

என் பெயர் கான். நான் ஒரு தீவிரவாதி அல்ல என்று ஷாருக்கான் நடித்த மை நேம் இஸ் கான் படத்தில் வரும் பிரபல வசனத்தை தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+