14 பொதுமக்கள் சிந்திய ரத்தத்துக்கு பழிவாங்குவோம்... நாகா ராணுவம் என்ற பெயரில் தீவிரவாதிகள் மிரட்டல்!
கோஹிமா: இந்திய ராணுவத்தால் 14 நாகா இன மக்கள் சிந்திய ரத்தத்துக்கு பழிவாங்குவோம் என்று நாகாலாந்து தனிநாடு கோரும் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் தீவிரவாதிகள் என சந்தேகித்து ராணுவம் நடத்திய தாக்குதலில் 14 பொதுமக்கள் உயிரிழந்தனர். பொதுமக்கள் ராணுவத்தின் மீது நடத்திய தாக்குதலில் ஒரு ஜவான் உயிரிழந்தார். நாகாலாந்து சம்பவங்களில் மொத்தம் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
இப்படுகொலை சம்பவம் நாகாலாந்து மாநிலத்தில் பெரும் பதற்றத்தையும் கொந்தளிப்பையும் உருவாக்கி உள்ளது. அத்துடன் ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. நாகாலாந்து அமைச்சரவையும் இன்று கூடி இச்சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளது.

பழிவாங்குவோம் என மிரட்டல்
இதனிடையே நாகாலாந்து தனிநாடு கோரும் தீவிரவாதிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், எங்கள் மக்கள் சிந்திய ரத்தத்துக்கு நாங்கள் பழிவாங்கியே தீருவோம். அப்படியான ஒரு நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்ளும் போது நாகா இன மக்கள் எங்களை புரிந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவம் மீது குற்றச்சாட்டுகள்
மேலும் ராணுவம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் நாகா தீவிரவாதிகள் முன் வைத்துள்ளனர். நாகாலாந்தில் ராணுவம் பொதுமக்களை சித்திரவதை செய்கிறது; பலாத்காரம் செய்கிறது; படுகொலை செய்கிறது.. இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகாலாந்து மக்கள் குடியரசு அரசின் நாகாலாந்து ராணுவம் என்ற பெயரில் இந்த அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதென்ன நாகா ராணுவம்?
நாகாலாந்து தனிநாடு கோருகிற நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (கப்லாங் பிரிவு) மியான்மரில் உள்ள கிழக்கு நாகாலாந்து பகுதியை தலைமையிடமாகக் கொண்டு நாகாலாந்து மக்கள் குடியரசு என்ற நாடு கடந்த அரசாங்கத்தை உருவாக்கி உள்ளனர். இதன் ராணுவம்தான் நாகா ராணுவம் என அழைக்கப்படுகிறது. நாடு கடந்த நாகாலாந்து அரசின் பிரதமர் Kitovi Zhimomi என்பவராவார். நாகாலாந்து தீவிரவாத அமைப்புகள் ஏற்கனவே மத்திய அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.

அமைதிப் பேச்சுகள்-ஆர்.என்.ரவி
கடந்த சில ஆண்டுகளாக நாகாலாந்து தீவிரவாத குழுக்களுடன் மத்திய அரசு சார்பாக ஆர்.என்.ரவி பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவரே நாகாலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். தற்போது தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பதவி வகித்து வருகிறார். தற்போதைய நிலையில் நாகா அமைதி பேச்சுவார்த்தைகள் தேக்க நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications