பாஜகவின் நமோ டீக்கு தடை.. தேர்தல் ஆணையம் அதிரடி- இலவச டீ லஞ்சத்திற்குச் சமம் என்று எச்சரிக்கை!
டெல்லி: பாஜகவினரின் நமோ டீ விற்பனைக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்து விட்டது. இலவசமாக எதையும் வாக்காளர்களுக்கு தரக் கூடாது என்றும் அது எச்சரித்துள்ளது.
இதனால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் மிகக் குறைந்த விலைக்கு இந்த டீ விற்பனையை அவர்கள் தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டீ விற்றவர் மோடி என்று காங்கிரஸார் பிரசாரம் செய்யப் போக அதையே தனக்கு சாதகமாக்கி நமோ டீ ஸ்டால் என்ற பெயரில் நாடு முழுவதும் டீக்கடைகளை நிறுவி இலவசமாக டீ விநியோகித்து வருகிறார்கள் பாஜகவினர்.
மோடி கூட்டம் நடக்கும் இடங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் இந்த நமோ டீஸ்டால்களைத் திறந்து இலவசமாக டீ விநியோகித்து வருகின்றனர். இந்த டீக்கடையும் பிரபலமாகி விட்டது.
மேலும் டீக்கடை போக பல்வேறு வகையான கடைகளையும் அவர்கள் திறந்து வருகின்றனர். மேலும் மோடியே டீக்கடைகளில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசவும் ஆரம்பித்துள்ளார்.
இந்த நிலையில் நமோ டீஸ்டால்களுக்கு தேர்தல் ஆணையம் திடீரென தடை விதித்து விட்டது. இலவசமாக டீ விநியோகம் செய்வது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்குச் சமம். இலவசமாக வாக்காளர்களுக்கு எதையும் தரக் கூடாது என்று அது கூறியுள்ளது.
மேலும் இலவசமாக டீ விநியோகிக்கும் பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்யவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பலர் மீது வழக்குப் போடப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்மிபூர் என்ற இடத்தில் மோடியின் டீக்கடை பிரசாரத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் பார்த்தவர்களுக்கு டீ விநியோகித்த பாஜகவினர் மீது வழக்குப் போட்டுள்ளனர் போலீஸார்.
வாக்காளர்களுக்கு இலவசமாக டீ விநியோகித்ததாவும், முன் அனுமதி பெறாமல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாகவும் அவர்கள் மீது போலீஸார் வழக்குப் போட்டுள்ளனராம்.

இந்தத் தடை குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், தேர்தல் சட்டப்படி வாக்காளர்களுக்கு எதையுமே இலவசமாக தரக் கூடாது. அப்படித் தந்தால் அது லஞ்சமாக கருதப்படும். வாக்காளர்களை விலைக்கு வாங்கும முயற்சியாக கருதப்படும். எனவேதான் இலவசமாக டீ விநியோகம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றனர்.
தேர்தல் ஆணையத்தின் தடையால் பாஜகவினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மிகக் குறைந்த விலைக்கு அதாவது 50 பைசா, ஒரு ரூபாய் என்ற மலிவு விலைக்கு டீ விற்று தொடர்ந்த நமோ டீ என்ற பெயரை தக்க வைக்க அவர்கள் முயல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications