உலகின் பிரபலமானவர்கள் பட்டியல் – மோடிக்கு நம்பர் 1.. ஒபாமாவுக்கு 11 ஆவது இடம்
டெல்லி: டைம்ஸ் பத்திரிகையின் உலகின் பிரபலமானவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. அமெரிக்க அதிபரான ஒபாமாவுக்கு 11 ஆவது இடம்தான் கிடைத்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டைம்ஸ் பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் மிகவும் பிரபலமானவர்களை வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்து பட்டியல் வெளியிடுகிறது.

அதன்படி, 2014 ஆம் ஆண்டில் மிகவும் பிரபலமானவர்களை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
தற்போது நடைபெற்று வரும் வாக்கெடுப்பில், சில தினங்களுக்கு பிரதமர் மோடி முதல் இடத்தில் இருந்தார். ஆனால் 4 தினங்களுக்கு முன், 2 ஆவது இடத்துக்கு வந்தார். தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் மொத்த வாக்குகளில் 12.8 சதவீத வாக்குகள் பெற்று பிரதமர் மோடி நேற்று முன்தினம் மீண்டும் முதல் இடத்தை பிடித்தார்.
பெர்கூசன் போராட்ட குழு 10.1 சதவீத வாக்குகளுடன் 2 ஆவது இடத்தில் உள்ளது. ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்காக போராடி வரும் இயக்கத்துக்கு தலைமை தாங்கும் ஜோசுவா வோங் 7.5 சதவீத வாக்குகளுடன் 3 ஆவது இடத்திலும், பாகிஸ்தானில் பெண் கல்விக்காக போராடிய மலாலா யூசுப்சாய் 5.2 சதவீத வாக்குகளுடன் 4 ஆவது இடத்திலும் உள்ளனர்.
இந்த பட்டியலில் எபோலா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் குழு 4.5 சதவீத வாக்குகளுடன் 5 ஆவது இடத்தில் உள்ளது. ரஷ்ய அதிபர் புதின் 4.1 சதவீத வாக்குகளுடன் 6 ஆவது இடத்திலும், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா 2.3 சதவீத வாக்குகளுடன் 11 ஆவது இடத்திலும் உள்ளனர்.
இந்த வாக்கெடுப்பு சனிக்கிழமை முடிவடைகிறது. இந்த ஆண்டின் சிறந்த மனிதர் யார் என்பதை டைம்ஸ் பத்திரிகை 10 ஆம் தேதி தேர்வு செய்து அறிவிக்க இருக்கிறது.
-
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications