For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகின் மிக "உயரமான போர்க்களத்திற்கு" நாளை செல்கிறார் மோடி!

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, உலகின் உயரமான போர்க்களம் என்று வர்ணிக்கப்படும் சியாச்சின் பனிச் சிகரத்திற்கு நாளை பயணம் மேற்கொள்கிறார்.

லடாக் பிரதேசத்தில் உள்ள லே மாவட்டத்திற்குட்பட்ட கார்கிலுக்குச் செல்லும் பிரதமர் அப்படியே சியாச்சின் செல்லவுள்ளார்.

லே மற்றும் லடாக் பகுதியில் இரண்டு மின் திட்டங்களையும் பிரதமர் தனது பயணத்தின்போது தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதலில் சென்ற சுஹாக்

முதலில் சென்ற சுஹாக்

முன்னதாக மோடியின் பயணத்தையொட்டி ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹாக், சியாச்சினுக்கு விஜயம் செய்து ஏற்பாடுகளைப் பார்வையிட்டார். மேலும், லே பகுதியில் ராணுவ வீரர்களுடனும் அவர் கலந்துரையாடினார்.

சியாச்சினுக்கு முதல் விஜயம்

சியாச்சினுக்கு முதல் விஜயம்

ராணுவத் தலைமைத் தளபதியான பின்னர் சுஹாக், லே மற்றும் சியாச்சினுக்கு வருவது இதுவே முதல் முறையாகும்.

உரை நிகழ்த்துவார் மோடி

உரை நிகழ்த்துவார் மோடி

மோடி தனது பயணத்தின்போது, பார்வர்ட் போஸ்ட் எனப்படும் ராணுவத்தின் முன்னணி பாதுகாப்பு முகாம்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளார். மேலும் சியாச்சினில் ராணுவ அதிகாரிகள், வீரர்களிடையே அவர் உரை நிகழ்த்தவும் உள்ளார்.

தளபதியும் செல்கிறார்

தளபதியும் செல்கிறார்

மோடியுடன் ராணுவத் தலைமைத் தளபதியும் உடன் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் பயணம்

முதல் பயணம்

சியாச்சினில் தற்போது 3000 வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். லே மற்றும் சியாச்சினுக்கு பிரதமரான பின்னர் மோடி முதல் முறையாக வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Prime Minister Narendra Modi will visit the Siachen Glacier, highest battleground in the world on Tuesday during his visit to Kargil and Leh district in Ladakh. Modi is likely to inaugurate two power projects in the districts. One day before Modi's visit to the district, Army Chief Gen Dalbir Singh Suhag visited Siachen and had an interaction with the army jawans at Leh and then at the glacier.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X