மோடியை ஃபேஸ்புக்கில் உன்னிப்பாய் கவனிக்கும் 1 கோடி ஃபேன்ஸ்
அகமதாபாத்: குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு ஃபேஸ்புக்கில் 1 கோடிக்கும் மேல் ஃபேன்ஸ் உள்ளனர்.
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் அவ்வப்போது கருத்து தெரிவித்து வரும் தலைவர்களில் ஒருவர். அவர் தான் அந்த நிமிடத்தில் என்ன செய்கிறோம், அன்று எந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறோம் என்பது உள்ளிட்ட விவரங்களை ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் தெரிவித்துவிடுவார்.

அவரை ட்விட்டரில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பின்தொடர்கிறார்கள். இந்நிலையில் அவருக்கு ஃபேஸ்புக்கில் உள்ள ஃபேன்ஸ்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியுள்ளது. இது நிச்சயம் மோடி மற்றும் பாஜகவுக்கு நல்ல செய்தி தான்.
கடந்த 6 மாதங்களாக ஃபேஸ்புக்கில் மோடியின் ஃபேன்ஸ்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக் கொண்டே வந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ம் தேதிப்படி அவருக்கு ஃபேஸ்புக்கில் 20 லட்சம் ஃபேன்ஸ் தான் இருந்தனர். ஆனால் நேற்று அவருடைய ஃபேஸ்புக் ஃபேன்ஸின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிவிட்டது.
கடந்த மாதம் 28ம் தேதி 10 லட்சத்திற்கும் மேற்ப்பட்டவர்கள் மோடியை பற்றி சமூக வலைதளங்களில் பேசினர். ஆனால் இந்த எண்ணிக்கை இன்று 10 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது.












Click it and Unblock the Notifications