என்ன ஒரே புகை மூட்டமா இருக்கு... டெல்லியை படம் பிடித்து காட்டிய நாசா

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் ஏற்பட்டிருக்கும் காற்று மாசுபாடு குறித்து நாசா நிறுவனம் சாட்டிலைட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. இந்த புகைப்படம் மூலம் டெல்லி எந்த அளவுக்கு புகையால் நிரம்பி இருக்கிறது என கண்கூடாக தெரிகிறது.

தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களாக மாசு கலந்த பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் சாலை விபத்துக்கள், ரயில் தாமதம், விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் காற்று மாசு அளவு ஆபத்து அளவை அங்கு எட்டி இருக்கிறது.

NASA photos showing smoke clouds in Delhi

இந்த நிலைமையை சமாளிக்க முடியாமல் அனைவரும் திணறும் சமயத்தில் நாசா நிறுவனம் அதிர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில் டெல்லி எந்த அளவுக்கு புகை மேகங்களால் சூழந்து இருக்கிறது என்பது காட்டப்பட்டு இருக்கிறது.

இதில் இருக்கும் முதல் புகைப்படத்தில் உள்ள சிவப்பு பகுதிகள் மாசுபட்ட காற்றை குறிக்கிறது. அதன்படி டெல்லியில் மிக அதிக அளவில் மாசடைந்த காற்று இருக்கிறது.

NASA photos showing smoke clouds in Delhi

இரண்டாவது புகைப்படத்தில் புகை மேகங்கள் டெல்லியில் எந்த பகுதியில் எல்லாம் சூழ்ந்து இருக்கிறது என காட்டப்பட்டு உள்ளது.

மேலும் இந்த புகையால் லக்னோ, லாகூர், கான்பூர் பகுதிகளும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. டெல்லியில் காற்று மாசின் அளவு 1010 புள்ளிகளை விட அதிகமாக இருக்கிறது. இது இதுவரை உலகில் பதிவான காற்று மாசு அளவை விட அதிகம் என நாசா எச்சரித்து இருக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

English summary
NASA photos showing smoke clouds in Delhi. It proves that Delhi has affected by huge amount of pollution.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X