For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐய்யப்பன் கோவில் அன்னதான முறைகேடு வதந்திகளை நம்பாதீர்கள் – தேவசம் போர்டு அமைச்சர்

Google Oneindia Tamil News

சபரிமலை: சபரிமலையில் வழங்கப்படும் அன்னாதானத்திற்கான நிதியில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று கேரள தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

சபரிமலை ஐய்யப்பனுக்கு செய்யப்பட வேண்டிய முக்கிய வழிபாடு அன்னதானம் ஆகும். இதன் காரணமாக சபரிமலைக்கு வரும் ஐய்யப்ப பக்தர்கள் பலரும் அன்னதானம் நடத்தி வருகிறார்கள். அன்னதானம் நடத்த இயலாத பக்தர்கள் தங்களால் முடிந்த அளவில் பணஉதவி செய்து வருகிறார்கள்.

No fraud in Sabarimala…

இந்தநிலையில் அன்னதானம் வழங்க பணம் வசூல் செய்வதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து கேரள தேவசம் அமைச்சர் வி.எஸ். சிவகுமார் தெரிவித்தபோது, "சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக பெரிய அளவில் தொகை வசூலித்து மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதை யாரும் நம்பவேண்டாம்.

அன்னதானம் நடத்த தேவசம் போர்டு நிதியில் இருந்து 5 ஆயிரம் ரூபாய் வீதம் செலுத்தலாம் என்று கேரள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சிலர் பிற மாநிலங்களிலும், கேரளாவிலும் அன்னதானம் நடத்துவதாக கூறி பொதுமக்களிடம் ரூபாய் 1 கோடி வரை பணம் திரட்டிவிட்டு, தேவசம் போர்டில் 5 ஆயிரம் ரூபாய் மட்டும் செலுத்துவதாக தெரிய வந்துள்ளது.

இந்த செயலை கண்டிப்பதுடன், இதுபோன்ற நடவடிக்கைகளில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

English summary
There is nothing fraud in Sabarimala Ayyappan temple feeding, Devasam board Ministers says.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X