புறக்கணிப்பு... தலித் என்பதாலே அரசு நிகழ்ச்சிகளுக்கு அழைக்கவில்லை... பாஜக எம்பி வருத்தம்
அவுரங்காபாத்: ‛‛தலித் என்பதாலே என்னை அரசு நிகழ்ச்சிகளுக்கு அழைக்காமல் புறக்கணிக்கின்றனர்'' என மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் நாடாளுமன்ற தொகுதி எம்பி சுதார் ஷ்ரங்கரே கூறினார்.
அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி நேற்று மகாராஷ்டிரா மாநிலம் லத்தூரில் அம்பேத்கரின் 72 அடி உயர சிலை திறக்கப்பட்டது.
இந்த விழாவில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, பாஜகவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பங்கேற்றனர். லத்தூர் நாடாளுமன்ற தொகுதி எம்பியாக இருக்கும் சுதாகர் ஷ்ரங்கரேவும் கலந்து கொண்டார்.

தலித் என்பதால் புறக்கணிப்பு
இந்த விழாவில் சுதாகர் ஷ்ரங்கரே பேசினார். அப்போது தான் தலித் என்பதாலேயே வேண்டுமென்றே அரசு நிகழ்ச்சிகளில் புறக்கணிக்கப்படுகிறேன் என வருத்தப்பட்டு கூறினார். அவர் கூறியதாவது: மாவட்ட கலெ க்டர் அலுவலகத்திலும், மாநகராட்சியிலும் பல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆனால் என்னை வேண்டுமென்ற அழைக்காமல் உள்னர். தலித் என்பதாலேயே என்னை புறக்கணிக்கின்றனர். நிகழ்ச்சியில் இருந்து என்னை அவர்களால் புறக்கணிக்கலாமே தவிர என்னை போன்று வேலை பார்க்க முடியாது.

மோடியிடம் புகார்
நான் எந்த குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்பதை நான்தான் தீர்மானிக்க முடியுமா?. நிகழ்ச்சி நிரல்களின் அழைப்பிதழ்களில் என் பெயர் இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக நான் பேசாமல் இருந்தேன். ஆனால் இன்று இதை சொல்ல விரும்பினேன். சொல்லி விட்டேன். லத்தூரில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை நான் கொண்டு வந்தேன். ஆனால் நான் டெல்லி சென்றபோது ஆலையை திறந்து வைத்தனர். இந்த அவலம் எனக்கு மட்டுமல்ல. மகாராஷ்டிராவில் அனைத்து இடங்களிலும் நடக்கிறது. இந்த விவகாரத்தை பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்துக் கூற வேண்டும்" என்றார்.

எச்சரிக்கை
இதற்கு மத்திய இணை அமைச்சர்(சமூக நீதித்துறை) ராம்தாஸ் அத்வாலே, ‛‛இதை கவனத்தில் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய பாகுபாடு கூடாது. இது சரியல்ல'' என்றார். தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், "அதிகாரிகள், எம்பியை மரியாதையுடன் நடத்த வேண்டும், இல்லையெனில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரிக்கை விடுத்தார்.

கர்நாடகத்திலும்...
முன்னதாக நேற்று கர்நாடகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் பரமேஸ்வர், அம்பேத்கர் ஜெயந்தி விழாவில் பேசினார். அப்போது, ‛‛நான்பிஎச்டி முடித்துள்ளேன். எம்எல்ஏ, அமைச்சர், துணை முதல்வர் பதவி வரை வகித்துள்ளேன். இருப்பினும் தலித் என்பதால் கோவிலுக்குள் நான் அனுமதிக்கப்படவில்லை'' எனக்கூறி வருத்தம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications