ஒடிஷா மாஜி ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் மனைவியின் லீவ் நீட்டிப்பு விண்ணப்பித்தை நிராகரித்த பாஜக அரசு
புவனேஸ்வர்: ஒடிஷாவில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பிய முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான விகே பாண்டியன். அவரது மனைவி சுஜாதா ஐ.ஏ.எஸ்.-ன் லீவ் நீட்டிப்பு விண்ணப்பித்தை ஆளும் பாஜக அரசு நிராகரித்துள்ளது; மேலும் உடனடியாக பணியில் இணைய வேண்டும் என்றும் ஒடிஷா மாநில பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிஷா மாநில அரசில் எத்தனையோ தமிழ்நாட்டு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணிபுரிந்துள்ளனர்; பணிபுரிகின்றனர். இவர்களில் அரசியல் ரீதியாக பெரும் புயலைக் கிளப்பியவர் விகே பாண்டியன் ஐஏஎஸ்.

ஒடிஷா மாநில ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய போது அதே மாநிலத்தைச் சேர்ந்த சுஜாதா ஐஏஎஸ் அதிகாரியை திருமணம் செய்து கொண்டார் விகே பாண்டியன். ஒரு கட்டத்தில் முதல்வராக இருந்த நவீ பட்நாயக்குக்கு வலதுகரமானார். பின்னர் பிஜூ ஜனதா தளம் கட்சியின் அதிகார மையமாக உருவெடுத்தார் விகே பாண்டியன். ஒரு கட்டத்தில் நவீன் பட்நாயக்குக்குப் பின் பிஜூ ஜனதா தளத்தின் அடுத்த தலைவராகக் கூடியவராக விகே பாண்டியன் விஸ்வரூபம் எடுத்தார்.
ஒடிஷா சட்டசபை தேர்தலில் பாஜகவின் பிரதான இலக்காக இருந்தவர் விகே பாண்டியன். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் விகே பாண்டியனை மையமாக வைத்தே தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர். தம்ழிநாட்டைச் சேர்ந்த ஒருவர் ஒடிஷாவை ஆள அனுமதிப்பதா? என்கிற பாஜகவின் பிரசாரம் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒடிஷாவில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடந்தது. அப்போது பாஜகவினர் அளித்த புகாரின் பேரில் ஐஏஎஸ் அதிகாரியான விகே பாண்டியன் மனைவி சுஜாதா இடம் மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் இதனை ஏற்க மறுத்த நீண்ட விடுப்பில் சென்றார் சுஜாதா ஐஏஎஸ்.
இந்த நிலையில் ஒடிஷா சட்டசபை தேர்தலில் பிஜூ ஜனதா தளம் தோல்வி அடைந்தது; நவீன் பட்நாயக், பிஜூ ஜனதா தளம் கட்சிகளிடம் இருந்து முற்று முழுதாக விகே பாண்டியன் விலகிக் கொண்டார். தற்போது, சுஜாதா ஐஏஎஸ் தமது விடுப்பை நீட்டிக்கக் கோரி ஒடிஷா மாநில பாஜக அரசுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். ஆனால் இந்த விடுப்பு நீட்டிப்பு கோரிக்கையை நிராகரித்துள்ள பாஜக அரசு, உடனடியாக சுஜாதாவை பணிக்கு திரும்பவும் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications