ஒரு தலைக்காதல்...கேரளாவில் கல்லூரி வளாகத்திற்குள் மாணவி கழுத்தறுத்து கொலை - மாணவர் கைது
கேரளாவில் கல்லூரி வளாகத்தில் வைத்து மாணவியை கழுத்தை அறுத்து மாணவர் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டையம்: ஒருதலைக்காதல் கொலைகள் தமிழகத்தில் மட்டுமல்ல கேரளாவிலும் அதிகரித்து வருகிறது. கோட்டையத்தில் உள்ள கல்லூரியில் தேர்வு எழுத வந்த மாணவியை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த மாணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கேரளா மாநிலம் கோட்டயத்திலுள்ள தாமஸ் கல்லூரி வளாகத்தில் வைத்து 22 வயது பெண்ணும் அவருடைய சக மாணவரும் காதலரும் பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது, இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் அந்த இளைஞர் பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார். அதனால், ரத்தம் வெளியேறி பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அந்த உயிரிழந்தநிலையிலும் அந்த இளைஞர் அங்கிருந்து ஓடவில்லை. காவல்துறை வந்து அவரைக் கைது செய்யும் வரையில் அங்கேயே உட்கார்ந்திருந்துள்ளார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவியை கொலை செய்த மாணவரின் பெயர் அபிஷேக் என்பதாகும். கேரளா மாநிலம் கோட்டயத்திலுள்ள தாமஸ் கல்லூரியில் தேர்வு எழுத வந்த போது தனது தோழியான மாணவியிடம் பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது, இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் அந்த இளைஞர் பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார். மாணவி துடி துடிந்து விழுந்தார். அதிக அளவில் ரத்தம் வெளியேறியதால் அந்த மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ரத்தம் வெளியேறி பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அந்த உயிரிழந்தநிலையிலும் அந்த இளைஞர் அங்கிருந்து ஓடவில்லை. காவல்துறை வந்து அவரைக் கைது செய்யும் வரையில் அங்கேயே உட்கார்ந்திருந்துள்ளார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணிற்கும் அபிஷேக்கிற்கும் இடையில் ஏற்கனவே நட்பு இருந்ததாக காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒருதலைக்காதல் கொலைகள் அதிகரிப்பு
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலப்புரம் மாவட்டம் எலநாடைச் சேர்ந்த பாலசந்திரன் என்பரின் மூத்த மகள் திரிஷ்யாவை அவருடன் படித்த பள்ளி நண்பர் வினீஷ் வினோத் ஒருதலையாக காதலித்து வந்தார். திரிஷ்யா எங்கு சென்றாலும் அவரை வினோத் பின் தொடர்ந்து சென்றார்.
இது குறித்து திரிஷ்யா தனது தந்தையிடம் தெரிவித்தார் இது குறித்து கடந்த ஏப்ரல் மாதம் பாலசந்திரன் போலீசில் புகார் அளித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வினோத் பாலசந்திரனின் கடை க்கு தீவைத்ததாக கூறப்படுகிறது.
திரிஷ்யாவின் வீட்டுக்கு சென்ற வினோத், வீட்டின் கீழ் பகுதி பூட்டப்பட்டு இருந்தது கதவை உடைத்து திறந்து உள்ளே சென்ற வினோத் மேல் மாடியில் இருந்த திரிஷ்யாவை தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார். அதை தடுக்க வந்த திரிஷ்யாவின் சகோதரி தேவஸ்ரீக்கும் கத்திகுத்து விழுந்தது. திரிஷ்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சட்டக்கல்லூரி மாணவர் வினோத் கைது செய்யப்பட்டார்.

பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி
பெண்கள் பாதுகாப்பு, பெண்களுக்கு சமஉரிமை என்று தொடர்ந்து பேசிவரும் நிலையில் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர் கதையாக நடைபெற்றுவருகின்றன. பெண் குழந்தைகள், இளம் பெண்கள் பலரும் நாள் தோறும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அல்லாமல் காதலிக்க மறுக்கும் பெண்களைக் கொலை செய்யும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெறுகின்றன.
தமிழ்நாட்டில் கடந்த 2016ஆம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்டச் சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. 2018ஆம் ஆண்டு சென்னை கே.கே.நகர் பகுதியிலுள்ள மீனாட்சி கல்லூரியில் படித்தவந்த அஸ்வினி என்ற மாணவியை காதல் விவகாரத்தில் இளைஞர் குத்திக் கொலை செய்தார்.
அதேபோல, கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை தாம்பரத்தில் தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவி ஸ்வேதாவை அவருடைய காதலன் ராமச்சந்திரன் குத்திக்கொலை செய்துகொண்டு தானும் தற்கொலை செய்ய முயன்றார். ஒருதலைக்காதல் விவகாரத்தில் பெண்களைக் கொலை செய்யும் போக்கு தொடர் கதையாக இருந்துவருகிறது.
கேரளாவில் கல்லூரி வளாகத்தில் மாணவி ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications