For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

”7 லட்சம் ஓட்டுகள், மூன்றே போட்டியாளர்கள்” களை கட்டும் மிசோரம் தேர்தல்

|

மிசோரம்: மிசோரம் மாநிலத்தில் 7 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில்,வெறும் 3 வேட்பாளர்கள் மட்டுமே தேர்தல் களத்தில் போட்டியிட உள்ளனர்.

இதனால் மிசோரம் மாநிலத்தில் ஓட்டு எண்ணிக்கைக்கே கிட்டதட்ட பல நாட்கள் ஆகும் என்று தெரிகின்றது.

ஏப்ரல் 9 இல் வாக்குப் பதிவு:

ஏப்ரல் 9 இல் வாக்குப் பதிவு:

மிசோரம் மாநிலத்தில் உள்ள ஒரே மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

3 போட்டியாளர்கள்:

3 போட்டியாளர்கள்:

7 லட்சம் பேர் வாக்களிக்க காத்திருக்கும் இந்தத் தொகுதியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிளைச் சேர்ந்த 3 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

பதற்றமான வாக்கு சாவடிகள்:

பதற்றமான வாக்கு சாவடிகள்:

அங்கு தேர்தலையொட்டி 1,126 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள 40 வாக்குச்சாவடிகள் "பதற்றமானவை" என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

கடும் போட்டி:

கடும் போட்டி:

இந்தத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும், தற்போதைய எம்.பி.யுமான சி.எல்.ரூவாலா, 8 கட்சிகளின் கூட்டணியான ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் ராபர்ட் ரோமாவியா ராய்தே ஆகியோர் இடையை கடும் போட்டி நிலவுகிறது.

இளைஞர்கள் ஆதரவு வேட்பாளர்:

இளைஞர்கள் ஆதரவு வேட்பாளர்:

ஆம் ஆத்மி கட்சி சார்பில் மைக்கேல் லால் மன்ஜுவாலா நிறுத்தப்பட்டுள்ளார். இவருக்கு இளைஞர்களின் ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது.

காங்கிரஸின் அமைச்சர்:

காங்கிரஸின் அமைச்சர்:

இங்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான 79 வயது ரூவாவலா, நான்கு முறை அமைச்சராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Mizoram state has 7 lakh voters. But, now there is only 3 members from various parties being candidates in this election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X