சசிகலாவுக்கு அதிக ஆதரவு உள்ளதை ஓ.பி.எஸ் ஒப்புக்கொண்டார்.. சசி தரப்பு வக்கீல் பிடித்த பாயிண்ட்
டெல்லி: பன்னீர்செல்வம் கணக்குப்படி பார்த்தால்கூட சசிகலாவுக்கு அதிக ஆதரவு இருப்பது உறுதியாகிறது என்று வழக்கறிஞர் அரிமா சுந்தரம் குறிப்பிட்டார்.
தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி முன்னிலையில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த வாத-விவாதங்கள் நடந்து வருகின்றது.
முதலில் ஓ.பி.எஸ் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, அதிமுக உறுப்பினர்கள் அதிகம்பேரின் ஆதரவு ஓ.பி.எஸ் அணிக்கு இருப்பதாக வாதம் முன்வைக்கப்பட்டது.

பிரமாண பத்திரம்
அப்போது அவர்கள் கூறுகையில், ஓபிஎஸ் அணியின் சார்பில் 5706 பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பத்திரங்கள் அடிப்படையில் பார்த்தால், 43,63,328 லட்சம் அதிமுக உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர் என வாதிட்டனர்.

அதே பாயிண்ட்
இதன்பிறகு சசிகலா அணிக்கு வாதிட வய்ப்பு கொடுக்கப்பட்டது. அப்போது வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதம் முன்வைத்தார். ஓ.பி.எஸ் அணி கூறிய புள்ளி விவரத்தையே அவருக்கு எதிராக திருப்பினார் அரிமா சுந்தரம்.

குளறுபடி
ஓ.பி.எஸ் தரப்பில் கொடுக்கப்பட்ட ஆவணங்களில் குழறுபடி இருப்பதாக அரிமா சுந்தரம் குறிப்பிட்டார். ஜோடிக்கப்பட்ட ஆவணங்கள் என்று கூறியதோடு, அப்படியே அவர் கூறியது உண்மையாக இருந்தாலும் கூட சசிகலாவுக்குதான் பெரும்பான்மை இருப்பதாக ஓ.பி.எஸ் தரப்பு ஒப்புக்கொண்டதாக அரிமா சுந்தரம் கூறினார்.

சசிகலாவுக்கு அதிக தொண்டர்கள்
அதாவது, ஓபிஎஸ் அணி 43,63,328 பேர் ஆதரவு இருப்பதாக கூறுகிறது. ஆனால், அதிமுகவின் தொண்டர்கள் ஒன்றரை கோடிபேர் உள்ளனர். அப்படிப்பார்த்தால் சசி அணிக்கே அதிக ஆதரவு என்று அரிமா சுந்தரம் வாதம் முன்வைத்தார். இதனால் ஓ.பி.எஸ் தரப்பு அதிர்ந்துபோனது.
-
சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் போட்ட பகீர் குண்டு.. ஆடிப்போன அதிமுக.. இபிஎஸ்-க்கு இப்படியொரு சிக்கலா -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி! -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்! -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்! -
மிதுன் பழனிசாமியை அரசியலுக்கு அழைத்து வர எடப்பாடி பழனிசாமி டிராமா ஆடுகிறார்.. சிவி சண்முகம்! -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்!












Click it and Unblock the Notifications