ப.சிதம்பரம் விரைவில் கைதாவது நிச்சயம்.. சொல்கிறார் சுப்பிரமணிய சாமி உறுதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விரைவில் கைதாவார் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அன்னிய முதலீடு பெற உதவிய குற்றச்சாட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கார்த்தி சிதம்பரத்தை வரும் 24ம் தேதி வரை டெல்லி திஹார் சிறையில் அடைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில், கார்த்தியை கைது செய்துள்ள சி.பி.ஐ., பல நாட்கள் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தியது.

ஜாமீன் மனு நிராகரிப்பு

ஜாமீன் மனு நிராகரிப்பு

இன்று அவரை டெல்லி பாட்டியாலாவில் உள்ள சி.பி.ஐ., நீதிமன்றத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். கார்த்தியின் ஜாமின் மனுவை உடனடியாக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.

சிதம்பரத்திற்கு திஹார் சிறை

சிதம்பரத்திற்கு திஹார் சிறை

அவரை 12 நாட்களுக்கு அதாவது வரும் 24ம் தேதி வரை நீதிமன்ற காவலில் திஹார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணிய சாமி செய்தியாளர்களிடம் பேசினார்.

விரைவில் கைதாவார்

விரைவில் கைதாவார்

அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் விரைவில் கைது செய்யப்படுவார் என அவர் கூறினார். பிரதமர் தலையீட்டால் அமலாக்கத்துறையும் சிபிஐயும் சுதந்திரமாக செயல்படுகிறது என்றும் அவர் கூறினார்.

தெரிந்தே தவறு செய்தார்

தெரிந்தே தவறு செய்தார்

ஏர்செல் விவகாரத்தில் சிதம்பரம் தெரிந்தே தவறு செய்துள்ளார் என்றும் அதன் மூலம் கார்த்தி சிதம்பரத்திற்கு பணம் கிடைத்தது என்றும் சுப்பிரமணிய சாமி தெரிவித்தார். சிதம்பரத்தின் மீது ஒரு மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

டிவிட்டரிலும் கருத்து

டிவிட்டரிலும் கருத்து

இதனால் ப.சிதம்பரம் கைதாவது நிச்சயம் என்றும் அவர் கூறினார். இதேகருத்தை சுப்பிரமணிய சாமி தனது டிவிட்டர் பக்கத்திலும் தெரிவித்துள்ளார்.

சிறைக்கு செல்வது உறுதி

அதாவது ப.சிதம்பரம் சிறைக்கு செல்வது நிச்சயம், அனைத்து தேசிய எதிர்ப்பு இயக்கங்களும் மற்றும் கண்கவர் டிவி அறிவிப்பாளர்களும் அணி திரட்டி ப.சிதம்பரத்தை காப்பாற்ற முயற்சிப்பதாகவும் சுப்பிரமணியசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Subramaniya sami has said that P Chidambaram will get jail soon. He also said that CBI and ED working free.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற