For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோட்சே தேசபக்தர் விவகாரம்... ஒரு வழியாக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார் பிரக்யா சிங்

Google Oneindia Tamil News

போபால்: மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதூராம் கோட்சேவை தேசபக்தர் என்ற கூறிய, பிரக்யா சிங் தாக்கூர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளார்.

மத்திய பிரதேசத்தின், போபால் தொகுதி பாஜக வேட்பாளராக, பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர் நிறுத்தப்பட்டுள்ளார். மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர், காந்தியை சுட்டுக்கொன்ற நாதூரம் கோட்சே தேசபக்தர் என்றார்.

Patriot Godse Issue: Pragya Singh Apologized

கோட்சேவை தீவிரவாதி என்பவர்களுக்கு, தேர்தல் மூலம், தக்க பாடம் கொடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். பிரக்யா சிங் தாக்கூர் கருத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. காந்தியை கொன்ற கோட்சே ஒரு இந்து தீவிரவாதி என்று அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் கூறியது, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அதே நேரம், பிரக்யாவுக்கு பாஜகவும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து டெல்லியில் பேசிய, பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ், கோட்சே குறித்த பிரக்யா சிங் தாக்கூரின் கருத்து, ஏற்புடையது அல்ல என்றும், உடனடியாக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மழை பெய்து வறட்சி நீங்கனும்... திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு யாகம் மழை பெய்து வறட்சி நீங்கனும்... திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு யாகம்

இதையடுத்து, மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதூராம் கோட்சேவை தேசபக்தர் என்று கூறியதற்கு, பகிரங்க மன்னிப்புக் கோருவதாக, பிரக்யா சிங் தெரிவித்திருக்கிறார். மேலும், யாருடைய மனதையும் காயப்படுத்த நான் விரும்பவில்லை, யாரையும் காயப்படுத்தியிருந்தால் நான் மன்னிப்புக் கேட்டு கொள்கிறேன், நாட்டிற்காக காந்திஜி செய்ததை மறந்துவிட முடியாது. தனது பேச்சை ஊடகங்கள் திரித்து திசை திருப்பி விட்டதாக பேசியுள்ளார்.

இதற்கிடையே, கோட்சேவை தேச பக்தர் என பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாகூர் கூறிய விவகாரம் தொடர்பாக, நாளைக்குள் அறிக்கை தர மத்திய பிரதேச தலைமை தேர்தல் அதிகாரிக்கு, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

English summary
Pragya Thakur on 'Godse is patriot' remark: If I've hurt anyone I do apologise
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X