மகா கும்பமேளா போகும் பிளான் இருக்கா? பிரயாக்ராஜ் நகரை அடைவது எப்படி! ரயில், விமானம், கார் எது பெஸ்ட்?
லக்னோ: 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் நடைபெற உள்ளது. இந்துக்களின் புனித நிகழ்வான மகா கும்பமேளா நிகழ்வுக்குப் பல கோடி பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நீங்களும் கிளம்ப பிளான் செய்திருந்தால்.. இந்த பிரயாக்ராஜ் நகருக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
உத்தரப் பிரதேசத்தில் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்வு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இது இந்துக்களின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

மகா கும்பமேளா:
அங்குள்ள பிரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் தளத்தில் தான் மகா கும்பமேளா நடைபெறுகிறது. உலகெங்கும் பல கோடி பேர் இந்த நிகழ்வுக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகா கும்பமேளா நிகழ்வு நாளை முதல் பிப்ரவரி மாதம் 26ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்குத் தேவையான ஏற்பாடுகளை உத்தரப் பிரதேச அரசும் மத்திய அரசும் செய்துள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து இந்த மகா கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜ் நகரை எப்படி அடையலாம் என்பது குறித்து நாம் பார்க்கலாம். பிரயாக்ராஜ் நகரில் உள்நாட்டு விமான நிலையம் இருக்கிறது. இது நகரில் இருந்து சுமார் 12 கிமீ தொலைவில் இருக்கிறது. ஏர்போர்ட்டில் இருந்து கார் அல்லது பஸ் மூலம் எளிதாக மகா கும்பமேளா நடைபெறும் இடத்திற்குச் செல்லாம். இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விமானம்:
டெல்லி, மும்பை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் இருந்து நேரடியாக பிரயாக்ராஜ் நகருக்கு விமானச் சேவை உள்ளது. மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள இப்போது பலரும் பிரயாக்ராஜ் நகருக்கு செல்வதால் விமான கட்டணம் அதிகமாகவே இருக்கிறது.
டெல்லியில் இருந்து பிரயாக்ராஜ் நகருக்கு ஜனவரியில் விமான டிக்கெட் கட்டணம் ரூ.5000 முதல் ரூ.15,000ஆக இருக்கிறது. அதேநேரம் மும்பையில் இருந்து விமான டிக்கெட் கட்டணம் ரூ.7,500 முதல் ரூ.12 ஆயிரமாக இருக்கிறது. பெங்களூரில் இருந்து பார்த்தோம் என்றால் ரூ.6800 முதல் ரூ.12,000 ஆக இருக்கிறது. அதேநேரம் சென்னை, கோவை உட்பட தமிழ்நாட்டில் எந்தவொரு நகரில் இருந்தும் பிரயாக்ராஜ் நகருக்கு நேரடியாக விமானச் சேவை இல்லை. இதனால் நாம் இணைப்பு விமானத்தையே எடுக்க வேண்டி உள்ளது. இதற்கு விமான டிக்கெட் கட்டணம் ரூ.10,000 முதல் ரூ.20,000 ஆயிரம் வரை இருக்கிறது.
ரயில்:
அடுத்த ஆப்ஷனாக ரயில்கள் உள்ளது. ரயில் மூலம் பிரயாக்ராஜ் நகருக்குச் செல்ல விரும்புவோருக்கும் பல ரயில்கள் உள்ளன. இந்த ரயில்கள் காலை 9 மணி முதல் இரவு 7.35 வரை உள்ளன. சென்னை- பிரயாக்ராஜ் நகருக்குத் தினசரி இயக்கப்படும் ரயில் ஒன்று தான் இருக்கிறது என்றாலும், வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை இயக்கப்படும் ரயில்களைச் சேர்த்தால் 13 ரயில்கள் உள்ளன. அவை சென்ட்ரல் அல்லது பெரம்பலூரில் இருந்து கிளம்புகிறது. தற்போது இந்த ரயில்களில் டிக்கெட் கிடைப்பது கடினம் என்றாலும் தட்கலில் டிக்கெட் போடலாம்.
பேருந்து
இல்லைப்பா.. நான் லாங் டிரிப் போல காரிலேயே போக விரும்புகிறேன் என்றால் அதற்கும் ஆப்ஷன் இருக்கிறது. ஸ்ரீநகர் கன்னியாகுமரி நொடுஞ்சாலை பிடித்தால் ரயிலை விட வேகமாக அதாவது 30 மணி நேரத்தில் நாம் பிரயாக்ராஜ் நகரை சென்று சேரலாம். இந்த ரூட்டில் செல்லும் போது சுங்க கட்டணமாக ரூ.3300 வரை செலுத்த வேண்டி இருக்கும்.












Click it and Unblock the Notifications