For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓரினச் சேர்க்கை தடைக்கு எதிரான மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றம் என்று அளிக்கப்பட்ட தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது குற்றம் இல்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 2009ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சமூக அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமாகும், இந்திய தண்டனைச் சட்டம் 377வது பிரிவின்படி தண்டனைக்குறிய குற்றம். ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்க இந்த சட்டம் வகை செய்துள்ளது என தீர்ப்பளித்தனர்.

Plea challenging SC verdict against gay sex to be heard in next week

இந்நிலையில், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவான அமைப்புகள் இந்த தீர்ப்பை மறுசீராய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தன. திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவராக அங்கீகரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை இந்த மனுவில் மனுதாரர்கள் மேற்கோள் காண்பித்துள்ளனர்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மறுசீராய்வு மனு மீதான விசாரணை நடத்த வாரம் நடைபெறும் என அறிவித்தனர்.

English summary
The Supreme Court on Tuesday agreed to hear in open court a curative petition of gay rights activists for decriminalizing gay sex.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X