பிரதமர் மோடிக்கு இன்று பிறந்தநாள்:ராகுல் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து! #HappyBdayPMModi
பிரதமர் நரேந்திர மோடி இன்று 68-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
Recommended Video

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று 68-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இன்று பள்ளிக் குழந்தைகளுடன் கலந்துரையாடும் அவர் பின்னர் காசி விஸ்வநாதர் ஆலயம் சென்று சிவபெருமானை தரிசிக்க உள்ளார்.
மோடியின் பிறந்தநாளான இன்று அவருக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இது தொடர்பான ஹேஷ்டேக்குகள் இன்று இந்திய அளவில் டிரென்டிங்கில் உள்ளன.
ராம்நாத் கோவிந்த் வாழ்த்து
பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன் நாட்டிற்கு பல ஆண்டுகள் அர்ப்பணிப்புமிக்க சேவை செய்ய வாழ்த்துவதாக கூறியுள்ளார்.
|
மோடிக்கு ராகுல் வாழ்த்து
இதேபோல் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் பிரதமர் மோடிக்கு டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் நமது பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். எப்போதும், மகிழ்ச்சியுடனும், நல்ல உடல்நலத்துடனும் இருக்க வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
|
அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் டிவிட்டர் வாயிலாக பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி நீண்ட ஆரோக்கியமான வாழ்வை பெற வாழ்த்துகிறேன் என அரவிந்த் கெஜ்ரிவார் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் வாழ்த்து
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மலர் கொத்துடன் வாழ்த்து கடிதத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் உங்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அற்புதமான ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன். மேலும் பல ஆண்டுகள் நல்ல உடல்நலத்துடன் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். என தெரிவித்துள்ளார்.
|
மோடிக்கு ஸ்டாலின் வாழ்த்து
இதேபோல் திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி உடல் நலத்துடன் நீண்ட ஆயுளை பெறவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications