For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீவிரவாதம் தோற்கடிக்கப்பட வேண்டும்.. காபூல் தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்!

காபூலில் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: காபூலில் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தீவிரவாதம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி 6 நாட்கள் பயணமாக, ஜெர்மனிஇ ரஷ்யா, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று பயங்க தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது.

காபூலில் இந்திய தூதரகம் அருகே இன்று தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.

இந்திய தூதரகம் சேதம்

இந்திய தூதரகம் சேதம்

காபூலின் இந்திய தூதரகம் அருகே சுமார் 1.5 கி.மீ தூரத்தில் உள்ள ஈரானிய தூதரகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் இந்திய தூதரக கட்டடம் லேசாக சேதமடைந்துள்ளது.

ஊழியர்கள் சேஃப்

ஊழியர்கள் சேஃப்

தூதரக அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து ஊழியர்களும் பத்திரமாக உள்ளதாக இந்திய தூதர் மான்ப்ரீத் வோரா கூறினார்.

மோடி கடும் கண்டனம்

இந்நிலையில் காபூலில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, காபூலில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் எங்களின் அனுதாபங்கள்.

தோற்கடிக்கப்பட வேண்டும்.

அனைத்து விதமான தீவிரவாத தாக்குதல்களையும் எதிர்கொள்ள இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு உறுதுணையாக இருக்கும். தீவிரவாதத்தை ஆதரிக்கும் படைகள் தோற்கடிக்கப்பட வேண்டும். இவ்வாறு மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

English summary
PM Modi condemns the Kabul attack. He said in his twitter page that 'India stands with Afghanistan in fighting all types of terrorism. Forces supporting terrorism need to be defeated'.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X