29 ரூபாய்க்கு லன்ச் சாப்பிட்ட நரேந்திர மோடி.. நாடாளுமன்ற கேன்டீனில்!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, இன்று நாடாளுமன்ற கேன்டீனில் ரூ. 29 கட்டணம் செலுத்தி மதிய உணவு வாங்கி சாப்பிட்டார்.
நாடாளுமன்ற வளாகத்தில் கேன்டீன் ஒன்று உள்ளது. இங்கு எம்.பிக்களுக்கு மகா மகா சலுகை விலையில் சாப்பாடு தரப்படுகிறது. இந்த கேன்டீனுக்கு எம்.பிக்கள் மட்டுமல்லாமல் நாடாளுமன்றத்துக்கு வருவோரும் விசிட் அடிப்பது வழக்கம். இதுவரை பிரதமர் யாரும் வந்ததில்லை. ஆனால் இன்று அதிசயமாக பிரதமர் நரேந்திர மோடி விசிட் அடித்தார்.

அங்குள்ள மதிய உணவு எப்படி இருக்கிறது என்று பார்க்க ஆசைப்பட்ட மோடி அங்கு வருகை தந்தார். சைவ சாதம், சாலட், பருப்புக் கூட்டு, கூட்டுக் கறியுடன் கூடிய மதிய உணவுக்கு அவர் ஆர்டர் கொடுத்தார். இதற்கான கட்டணம் ரூ. 29 மட்டுமே.
மோடியுடன் குஜராத்தைச் சேர்ந்த 2 எம்.பிக்களும் உடன் வந்திருந்தனர்.
நாடாளுமன்ற கேன்டீனில் விற்பனை செய்யப்படும் உணவுகளின் விலை மிக மிக குறைவாகும். இங்கு எம்.பிக்கள் மட்டுமல்லாமல் பத்திரிகையாளர்களும் கூட ரெகுலராக சாப்பிடுவது வழக்கம். இங்கு ரூ. 12க்கு வயிறு நிறைய சாப்பிடலாம். அதிகபட்ச விலை கோழி பிரியாணிக்குத்தான். அதாவது ரூ. 34 கொடுத்தால் கோழி பிரியாணி கிடைக்கும். இதுதான் இந்த கேன்டீனில் ரொம்ப காஸ்ட்லியான சாப்பாடு என்பது குறிப்பிடத்தக்கது.
Modi வந்து சாப்பிட்டுப் போயிருக்கிறார்.. கேன்டீனில் ஏதாவது "Modification" வருமான்னு தெரியலையே!
-
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications