For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நான் ஹவாபாஸின்னா ('வாய்சவடால்' நபர்) நீங்க ஹவாலாபாஸ் (ஊழல்வாதிகள்) .... சோனியாவுக்கு மோடி பதிலடி!!

By Mathi
Google Oneindia Tamil News

போபால்: தம்மை "ஹவாபாஸி" (வாய்ச்சவடால் நபர்) என அழைக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போன்றவர்கள்தான் 'ஹவாலாபாஸி' (ஊழல்வாதிகள்) என பிரதமர் மோடி கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் நரேந்திர மோடி லோக்சபா தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை. அவர் வாய்சவடால் நபர் ( ஹவாபாபாஸி) என்ற சாடியிருந்தார்.

PM Modi hits back at Sonia Gandhi's 'hawa baazi' jibe

இதற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில் போபாலில் இன்று இந்தி மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி இது குறித்து பேசியதாவது:

என்னை ஹவாபாஸி என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் கருப்புப் பணம் போன்ற விவகாரங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி விடுவார்களோ என்று ஹவாலாபாஸ் (ஊழல்வாதிகள்) அச்சப்படுகின்றனர்.

இதனால் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் அவர்கள் முடக்கி வருகிறார்கள். மக்களால் நிராகரிக்கப்பட்ட நீங்கள் நாடாளுமன்றத்தை முறையாக நடத்த அனுமதிக்க வேண்டும் என்று இந்த கூட்டத்தின் மூலமாக கேட்டுக் கொள்கிறேன்.

உலகமே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் போது இந்தியா சொந்தக் காலில் நின்று கொண்டிருக்கிறது. இந்தியா முன்னேறுவதற்கு முன்னெப்போதையும் விட ஒரு நல்ல சந்தர்ப்பம் இப்போது கிடைத்திருக்கிறது... இதை வீணாக்கிவிடக் கூடாது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

English summary
Blaming Congress for delaying GST, Prime Minister Narendra Modi attacked the main opposition party alleging the "hawalabaaz are unnerved" due to the tough stance of the government on black money and are putting "roadblocks" in the reforms agenda.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X