For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாரீஸ் பருவநிலை உச்சி மாநாடு.. பிரான்ஸ் புறப்பட்டார் மோடி

Google Oneindia Tamil News

டெல்லி: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறும் பருவநிலை உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று பிரான்ஸ் புறப்பட்டார்.

COP 21 என்று அழைக்கப்படும் இம்மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன. பிரதமர் மோடி இம்மாநாட்டில் கலந்துகொண்டு உலகம் வெப்பமயமாதலை எதிர்கொள்வதில் இந்தியாவின் பங்கு என்பது குறித்து பேச உள்ளார்.

PM Modi leaves to Paris to attend Global Climate Summit

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில்,

பாரிசில் நடைபெறும் COP 21 மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் செல்கிறேன். இம்மாநாட்டில் உலகம் வெப்பமயமாதலால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், கார்பன் பயன்பாட்டை குறைப்பதற்கு இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் பேச இருக்கிறேன்.

சர்வதேச நாடுகளின் சூரியமின் சக்திக்கான கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில், பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் அதிபர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

அண்மையில், பாரிசில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டதையடுத்து, மாநாடு நடைபெறும் இதயத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதனையடுத்து, அமெரிக்க அதிபர் ஒபாமாவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள " புதுமையான முயற்சிகள்" எனும் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

English summary
Prime Minister Modi Sunday left for Paris to attend climate change conference
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X