For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீர்ந்தது விசா பிரச்சினை - அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார் மோடி!

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடியின் அமெரிக்காப் பயணம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் அமெரிக்கா செல்லும் மோடி, 27ம் தேதி ஐ.நா. சபையில் பேச இருக்கிறார். பின்னர், அமெரிக்க அதிபர் ஒபாமாவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

2002ம் ஆண்டு குஜராத் இனக்கலவரத்தைக் காரணம் காட்டி அப்போது அங்கு முதல்வராக பதவி வகித்த நரேந்திர மோடிக்கு, 2005ம் ஆண்டு தொடங்கி அமெரிக்கா விசா வழங்க மறுத்து வந்தது. இந்நிலையில், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று மத்தியில் மோடி தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது.

மோடி பிரதமராக பதவியேற்றதும், அவருக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ஒபாமா அமெரிக்கா வரும் படி அழைப்பும் விடுத்தார்.

ஜான் கெர்ரியின் வருகை...

ஜான் கெர்ரியின் வருகை...

இந்நிலையில், இருநாட்டு உறவுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த கடந்த வாரம் இந்தியா வந்திருந்தார் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி. அப்போது மோடியையும் அவர் சந்தித்துப் பேசினார்.

விசா வழங்கப்படும்...

விசா வழங்கப்படும்...

மேலும், மோடி அரசைப் பாராட்டிப் பேசிய ஜான் கெர்ரி விரைவில் மோடிக்கு விசா வழங்கப்படும் என உறுதியளித்தார்.

அமெரிக்கப் பயணம் உறுதி...

அமெரிக்கப் பயணம் உறுதி...

அதனைத் தொடர்ந்து நேற்று மோடியின் அமெரிக்கப் பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா.சபையின் 69ம் ஆண்டு கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

ஒபாமாவுடன் சந்திப்பு...

ஒபாமாவுடன் சந்திப்பு...

அதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஒபாமாவைச் சந்திக்க உள்ளார் மோடி. அப்போது இருநாட்டு உறவுகள் தொடர்பாக அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் எனத் தெரிகிறது.

English summary
Prime Minister Narendra Modi is expected to address the United Nations General Assembly on September 27, giving his first global speech to an audience of nearly 200 world leaders and foreign ministers at the annual gathering of the world body's policymaking organ. Apart from addressing the General Assembly, Modi is expected to travel to Washington for his first meeting with US President Barack Obama.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X