For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காப்பகத்தில் குழந்தைகளை கடத்தி விற்ற கன்னியாஸ்திரிகள்.. ராஞ்சியில் அதிர்ச்சி

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    காப்பகத்தில் பிறக்கும் குழந்தைகளை விற்ற கன்னியாஸ்திரிகள்- வீடியோ

    ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில், மிஷினரிஸ் ஆப் சாரிட்டி அமைப்புக்கு சொந்தமான, நிர்மல் ஹ்ரிடே என்ற காப்பகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த காப்பகத்தில் கருவுற்றிருக்கும் 11 சிறுமிகள் 75 மாற்றுத்திறனாளி பெண்கள் உள்ளனர். திருமணமாகாமலேயே கர்ப்பமாகும் சிறுமிகளுக்கு இங்கு அடைக்கலம் தரப்படுகிறது.

    Police arrested two nuns on charges of child trafficking

    இந்த காப்பகத்தில் சிறுமிகளுக்கு பிறந்த குழந்தையை வேறு ஒருவருக்கு ரூ.50,000த்திற்கு விற்பனை செய்ததாக கன்னியாஸ்திரி கொஞ்சிலியா என்பவர் உட்பட 2 கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைடுத்து காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ராஞ்சி டிஎஸ்பி ஷியாம்நாத் மண்டல் கூறுகையில், மொத்தம் 4 குழந்தைகள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஒரு குழந்தை உ.பிக்கும், மேலும் 3 குழந்தைகள் ஜார்கண்டிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

    11 சிறுமிகள் வேறு ஒரு காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்தக் காப்பகம் மிஷினரிஸ் ஆப் சேரிட்டி என்ற அமைப்பின் கீழ் செயல்பட்டு வருவதாகவும் இந்த அமைப்பிற்குச் சொந்தமாக வேறு சில காப்பகங்களும் செயல்பட்டு வருகின்றன என்றும், இருப்பினும் அந்த காப்பகங்களுக்கு சிறுமிகளை அனுப்புவது பாதுகாப்பு இல்லை என்று போலீசார் கருதுகின்றனர்

    எனவே வேறு அமைப்பின் காப்பகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தை குழந்தைகள் நல கமிட்டி அதிகாரிகள் ஆய்வு செய்தனர் விதிமுறைகளின்படி திருமணமாகாத குழந்தைகளை பாதுகாப்பதற்கு குழந்தைகள் நல கமிட்டி அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Ranchi: Police arrested two nuns of Missionary of Charity on charges of child trafficking.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X