டெல்லியில் பள்ளி பேருந்தை வழி மறித்து சிறுவன் கடத்தல்.. பொறி வைத்து பிடித்த போலீஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  டெல்லியில் கடத்தப்பட்ட சிறுவன் போலிசாரால் மீட்பு..வீடியோ

  டெல்லி: டெல்லியில் சமீப காலமாக அதிகமான குற்றச்சம்பவங்கள் நடக்கிறது. கொலை, கொள்ளை, கடத்தல், பாலியல் வன்புணர்வு என வரிசையாக ஏதாவது நடந்து கொண்டே இருக்கிறது.

  இந்த நிலையில் இரண்டு வாரம் முன்பு அங்கு நடந்த கடத்தல் ஒன்றில் தற்போது குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். டெல்லி போலீஸ் மிகவும் திறமையாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

  அந்த சிறுவன் பள்ளி பேருந்தில் இருந்த போது எல்லோருக்கும் முன் கடத்தப்பட்டு இருக்கிறான். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  என்ன நடந்தது

  என்ன நடந்தது

  இந்த கடத்தல் கடந்த ஜனவரி 25ம் தேதி நடந்து இருக்கிறது. அங்கு சென்று பள்ளி பேருந்து ஒன்றை இருவர் பைக்கில் வந்து மறைத்துள்ளனர். துப்பாக்கி மூலம் டிரைவரை மிரட்டி பின் அங்கு இருந்த ஐந்து வயது சிறுவனை கடத்தி சென்று இருக்கிறார்கள். டிரைவரை பின் தாக்கி உள்ளனர்.

  2 வாரமாக தேடல்

  2 வாரமாக தேடல்

  இந்த நிலையில் போலீஸ் கடந்த இரண்டு வாரமாக அவர்களை தேடி வந்தது. ஆனாலும் இதில் பெரிதாக எந்த துப்பும் கிடைக்கவில்லை. மேலும் போலீசுக்கு கிடைத்த தகவல்களும் பொய்யான தகவல்களாகவே இருந்தது. அப்போது கடத்தல்காரர்கள் பெற்றோரிடம் போன் செய்து பணம் கேட்டு இருக்கிறார்கள்.

  50 லட்சம் பணம்

  50 லட்சம் பணம்

  அவர்கள் 50 லட்சம் பணம் கேட்டு இருக்கிறார்கள். இந்த போன் இரண்டு முறை வந்து இருக்கிறது. இதை வைத்து அவர்கள் இருந்த இடத்தை போலீஸ் கண்டுபிடித்தது. மேலும் அங்கு சிறுவனை 10 நாட்களாக அடைத்து வைத்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

  பிடித்தனர்

  பிடித்தனர்

  அங்கு சென்ற போலீசார் மீது கடத்தல்காரர்கள் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார்கள். இதில் ஒரு கடத்தல்காரன் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டான். மீதம் இருவர் பிடிப்பட்டனர். அந்த சிறுவனை உயிருடன் மீட்கப்பட்டு அவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான்.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Police encounters 1 men and arrests two men in school student kidnap case. They have successfully rescued the school student.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற