For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'பசு பாதுகாவலர்களுக்கு' இந்த விஷயம் தெரியுமா?

சாலைகளில், மேய்ச்சல் பகுதிகளில் கிடைக்கும் பாலிதீன் பைகளை தின்று ஜீரண கோளாறுகளால் அவதிப்படும் பசுக்கள் உள்ளிட்ட கால்நடைகள் ஆண்டுக்கு 1000திற்கு மேல் பரிதாபமாக பலியாகின்றன என்று உ. பி. மாநில ஆய்வு அறி

By Devarajan
Google Oneindia Tamil News

லக்னோ: பாலிதீன் பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் கழிவுகளால், உத்தரபிரதேச மாநிலத்தில் ஆண்டுக்கு 1000 மாடுகள் வரை மரணமடைவதாக மாநில கால்நடைத்துறை நடத்தியுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டு இறந்த மாடுகளை, மாதம் ஒன்றிற்கு குறைந்தது 50 மாடுகளை போஸ்ட் மார்ட்டம் செய்யப்படுகிறது. இறந்துள்ள மாடுகளில் பெரும்பாலானவை பசுக்கள் என்பது கவலை தரும் ஒன்று.

 Polythene bags kills over 1000 cows per year in Uttar Pradesh

இறந்துவிட்ட ஒவ்வொரு மாட்டின் உடலிலிருந்தும் 55 முதல் 60 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதாக அத்துறையின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தின் லக்னோ, குர்கான் உள்ளிட்ட எல்லா நகரப்பகுதிகளிலிலும் பகுதியில் உள்ள காய்கறி, இறைச்சி விற்பனைக் கடைகள், பேக்கரிகள், உணவகங்கள் மற்றும் தள்ளுவண்டி பழக்கடைகளில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

அவற்றை பெற்றுச்செல்லும் பொது மக்கள் பாலிதீன் பைகளை குப்பைத் தொட்டிகளில் வீசிச் செல்கின்றனர். தற்போது வறட்சியால் நகர் பகுதி தெருக்களில் புற்கள், செடிகள் இல்லாத நிலையில் தெருவில் சுற்றித்திரியும் கால்நடைகள் குப்பைத் தொட்டியில் கிடக்கும் பாலிதீன் பைகளை உணவுக் கழிவுகளுடன் சேர்த்து சாப்பிட்டு, குடல் மற்றும் இரைப்பை பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகியுள்ளன.

பசுப்பாதுகாவலர்கள் உத்தர பிரதேச மாநிலத்தில் பரவிக்கிடக்கும் பாலிதீன் பைகளை பற்றி கவலை கொள்வதில்லை என்றும், மாட்டிறைச்சி தடைக்கு பாடுபடும் அவர்கள்மாடுகள் வாழ வழியேற்படுத்தலாம் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

உ.பி. பாஜக அரசு பாலிதீன் பயன்பாடு பற்றிய ஆபத்துக் குறித்து உரிய நடவடிக்கைகள் எடுத்து பொதுமக்களிடமும் வணிகர்களிடமும் போதிய விழிப்புணர்வு எடுத்துவர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

English summary
In Uttar Pradesh nearly 1000 cows die per year due to polythene bags
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X