For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாடு முழுவதும் இந்தி மொழியை பிரபலப்படுத்த வேண்டும்: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வலியுறுத்தல்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் இந்தி மொழியை பிரபலப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் நடைஎப்ற்ற இந்தி மொழி சிறப்பு நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, இந்தி அறிஞர்களுக்கு அவர் விருது வழங்கி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

சாதாரண மக்கள் பலனடையும் வகையில், அரசு நிர்வாக பயன்பாட்டில் உள்ள இந்தி மொழி வார்த்தைகளை மேலும் எளிமைப்படுத்த வேண்டும். நாட்டின் அலுவல் மொழியான இந்தியை பரப்புவதில், ஒவ்வொருவரும் கூடுதல் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் உள்ள 21 அரசு அலுவல் மொழிகளில், இந்தி சிறப்பான இடத்தை வகிக்கிறது. நோபல் விருது பெற்ற ரவீந்திரநாத் தாகூர், ‘இந்திய மொழிகள் நதிகள் என்றால், இந்தி மொழி கடல்' என்று கருத்து தெரிவித்தார்.

President Pranab Mukherjee appeals for popularization of Hindi

மத்திய அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசு துறைகள் சார்பில், இந்தி மொழி இணையதளம் தொடங்கப்பட வேண்டும். இதன் மூலம் அரசு திட்டங்கள் அனைத்தும் தெரிவிக்கப்பட்டு சாதாரண மக்களை சென்றடைய வேண்டும்.

இந்தி மொழியையும் கலாசாரத்தையும் பிரபலப்படுத்த வேண்டும். ஜனநாயகம் தழைத்தோங்க இந்தி மற்றும் பிராந்திய மொழிகளின் பயன்பாட்டை அதிகப்படுத்த வேண்டும்.

இணையதளம் மற்றும் செல்போன்களில் இந்தி மொழி பயன்பாட்டை அதிகப்படுத்துவதன் மூலம், அரசின் திட்டங்களை எளிதில் பொதுமக்களுக்கு கொண்டு செல்ல முடியும்.

இவ்வாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசினார்.

English summary
President Pranab Mukherjee on Sunday appealed for the popularization of Hindi, saying it has a special place among all the languages in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X