Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரதமர் மோடி தாயார் ஹீராபென் மறைவு LIVE: குஜராத் காந்திநகரில் உடல் தகனம்

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி (வயது 100) இன்று அதிகாலையில் காலமானார். ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் சேர்ந்திருக்கிறது என தமது தாயார் ஹீராபென் மோடியின் மறைவுக்கு புகழஞ்சலி செலுத்தி உள்ளார் பிரதமர் மோடி. ஹீராபென் மோடியின் உடல் இன்று காலை குஜராத்தின் காந்திநகரில் தகனம் செய்யப்பட்டது.

பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் முதுமை காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அகமதாபாத் யு.என். மேத்தா இதய நோய் சிகிச்சை, ஆராய்ச்சி மையத்தில் புதன்கிழமை உடல்நலக் குறைவால் ஹீராபென் மோடி அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை காலமானார்.

இதனைத் தொடர்ந்து குஜராத் விரைந்தார் பிரதமர் மோடி. தாயார் ஹீராபென்னுக்கு கண்ணீர்மல்க இறுதி அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி. ஹீராபென் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Prime Minister Narendra Modis mother Heeraben Modi passes away Live Updates in Tamil

Dec 30, 2022, 4:04 pm IST

பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆழ்ந்த இரங்கல்
Dec 30, 2022, 2:09 pm IST

தம் அன்னையாரை இழந்து வருந்தி துயருறும் பிரதமர் மோடி அவர்களுக்கு திராவிடர் கழகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது- தி.க.வீரமணி
Dec 30, 2022, 1:21 pm IST

கங்கை கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்பு
Dec 30, 2022, 12:43 pm IST

தாயார் ஹீராபென் மறைவுக்காக அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்யக் கூடாது என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்- மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்
Dec 30, 2022, 11:46 am IST

மே.வங்க வந்தே பாரத் ரயில் தொடக்க விழா- வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்றார் பிரதமர் மோடி
Dec 30, 2022, 11:32 am IST

பிரதமர் @narendramodi அவர்களின் அன்புக்குரிய தாயார் ஹீராபென் வயது மூப்பு & உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தி கேட்டு வேதனையுற்றேன்- தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்
Dec 30, 2022, 11:25 am IST

பிரதமர் அவர்களின் தாயார் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது ஆழ்ந்த இரங்கல்- இயக்குநர் பாரதிராஜா
Dec 30, 2022, 11:25 am IST

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு தேடப்படும் பாலியல் குற்றவாளி சர்ச்சை சாமியார் நித்தியானந்தா இரங்கல்
Dec 30, 2022, 11:19 am IST

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் ஹீராபென் அம்மையார் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மனத்துயரம் அடைந்தேன்- நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
Dec 30, 2022, 11:04 am IST

தாயார் மறைந்த போதும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை ரத்து செய்யாத பிரதமர்- மே.வங்கத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைக்கிறார்
Dec 30, 2022, 10:45 am IST

ஹீராபென் மோடி மறைவுக்கு மூத்த பாஜக தலைவர் எல்.கே.அத்வானி ஆழ்ந்த இரங்கல்
Dec 30, 2022, 10:31 am IST

அன்னை தீபம் அணைந்து விட்டது எங்கள் பிரதமரின் அன்பு வெள்ளம் மறைந்ததைக் கேட்டு எங்கள் கண்களில் கண்ணீர் வெள்ளம்- ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
Dec 30, 2022, 10:22 am IST

ஹீராபென் மோடியின் மறைவுக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ஆழ்ந்த இரங்கல்
Dec 30, 2022, 10:18 am IST

கண்ணீர் துயரத்துடன் பிரதமர் மோடியின் தாயாரின் உடல் தகனம் செய்யப்பட்டது
Dec 30, 2022, 10:10 am IST

பாரதப் பிரதமர் @narendramodi அவர்களின் தாயார் #HeerabenModi மறைந்த செய்தி அறிந்து துயருற்றேன்- மநீம தலைவர் கமல்ஹாசன்
Dec 30, 2022, 10:01 am IST

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது - அன்புமணி ராமதாஸ்
Dec 30, 2022, 9:46 am IST

ஹீராபென் மோடிக்கு இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே ஆழ்ந்த இரங்கல்
Dec 30, 2022, 9:45 am IST

பிரதமர் அவர்களின் தாயார் அம்மையார் ஹீராபென் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்- சசிகலா
Dec 30, 2022, 9:40 am IST

ஹீராபென் அம்மையார் காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்- பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
Dec 30, 2022, 9:38 am IST

பிரதமரின் தாயின் மறைவுக்கு ஆறுதல் கூற குஜராத் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
Dec 30, 2022, 9:38 am IST

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக் குறைவால் காலமானார்
Dec 30, 2022, 9:38 am IST

பிரதமரின் தாயாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அகமதாபாத் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
Dec 30, 2022, 9:37 am IST

சென்னையிலிருந்து பகல் 12 மணிக்கு விமானத்தில் செல்கிறார்
Dec 30, 2022, 9:37 am IST

பிரதமர் மோடிக்கு ஆறுதல் கூற குஜராத் செல்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்
Dec 30, 2022, 9:37 am IST

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல் காந்திநகரில் தகனம்
Dec 30, 2022, 9:36 am IST

ஹீராபென் உடல் காந்திநகரில் தகனம் செய்யப்பட்டது
Dec 30, 2022, 9:35 am IST

ஹீராபென் மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆழ்ந்த இரங்கல்
Dec 30, 2022, 9:33 am IST

ஹீராபென் மோடி மறைவுக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆழ்ந்த இரங்கல்
Dec 30, 2022, 9:31 am IST

பிரதமர் மோடியின் தாயார் மறைவு செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன்: காங். தலைவர் மல்லிகார்ஜூன கார்கே
Dec 30, 2022, 9:30 am IST

பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+