For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கென்யா தாக்குதல்: பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு உதவுவதாக மோடிக்கு பிரதமர் பதில் கடிதம்

Google Oneindia Tamil News

டெல்லி: கென்ய வணிக வளாகத் தாக்குதலில் பாதிக்கப் பட்ட இந்திய வம்சாவளியினருக்கு உதவி செய்யக் கோரி, குஜராத் முதலமைச்சர் மோடி எழுதிய கடிதத்திற்கு உடனடியாக பதில் எழுதியிருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்.

கென்யா தலைநகர் நைரோபி வணிகவளாகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போது, அங்கு குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. தாக்குதலில் சிக்கி 20 குஜராத் குழந்தைகளைக் காணவில்லை என அதிகரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

இந்நிலையில், கென்யா தாக்குதலில் சிக்கி படுகாயம் அடைந்த இந்தியர்கள் மற்றும் இந்தியா வம்சா வழிகளின் பாதுகாப்புக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை அளிக்க வேண்டும் என குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, நரேந்திர மோடியின் கடிதத்துக்கு உடனடியாக பதில் கடிதம் அனுப்பியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘கென்யாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சா வழியைச் சேர்ந்தவர்கள் பலியான சம்பவம் மிகுந்த துயரமானது ஆகும். அவர்களின் குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய அரசு செய்து உள்ளது. இந்தியர்களின் பாதுகாப்பு பற்றி கென்யா அதிபருக்கு நான் கடிதம் எழுதியும் உள்ளேன். நைரோபியில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறது' எனக் கூறியுள்ளார்.

English summary
The Gujarath Cheif minister and BJP's PM candidate Narendra modi has recently writen a letter to the Prime minister regarding Kenya mall attack. Prime minister has replied to Modi's letter immediatly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X