பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ11,360 கோடி சட்டவிரோத பண பரிமாற்றம்-சிக்கிய குஜராத் தொழிலதிபர் நிரவ் மோடி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ரூ.11,000 கோடி மெகா மோசடியில் ஈடுபட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி

  மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கின் மும்பை கிளையில் ரூ11,360 கோடிக்கு சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்த புகாரில் குஜராத் வைர வியாபாரி நிரவ் மோடி விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளார்.

  குஜராத் வைர வியாபாரியான நிரவ் மோடியும் சில நிறுவனங்களும் இணைந்து ரூ11,360 கோடிக்கு சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாக சிபிஐயிடம் பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் தெரிவித்துள்ளது. இதை சிபிஐ தரப்பு உறுதி செய்துள்ளது.

  நிரவ் மோடியின் ரூ280 கோடி மோசடி

  நிரவ் மோடியின் ரூ280 கோடி மோசடி

  நிரவ் மோடி, அவரது மனைவி அமி மோடி, சகோதரர் நிஷால் மோடி தொடர்புடைய ரூ. 280 கோடி மோசடி குறித்து கடந்த மாதம்தான் சிபிஐ-யிடம் பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் தெரிவித்திருந்தது. இது தொடர்பான விசாரணையும் நடைபெற்று வருகிறது.

  சட்டவிரோத பணப் பரிமாற்றம்

  சட்டவிரோத பணப் பரிமாற்றம்

  தற்போது பல்லாயிரம் கோடி சட்டவிரோதப் பணப் பரிமாற்ற விவகாரத்தில் நிரவ் மோடி சிக்கியுள்ளார். இந்த சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

  10 வங்கி ஊழியர்கள் சஸ்பெண்ட்

  10 வங்கி ஊழியர்கள் சஸ்பெண்ட்

  மேலும் அமலாக்கப் பிரிவினரும் நிரவ் மோடி மீது பணமோசடி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் நிரவ் மோடிக்கு உடந்தையாக இருந்ததாக 10 வங்கி ஊழியர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.

  மோசடியில் அதிகாரிகளுக்கு தொடர்பு

  மோசடியில் அதிகாரிகளுக்கு தொடர்பு

  வங்கியின் முன்னாள் அதிகாரிகள் கோகுல்நாத் ஷெட்டி, மனோஜ் கரத் ஆகியோருக்கும் இந்த சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது. இச்செய்திகள் வெளியான நிலையில் மும்பை பங்குச் சந்தையில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்குகள் வீழ்ச்சியடைந்தன.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Punjab National Bank had detected fraudulent transactions worth Rs 11,360 crore in its south Mumbai branch.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற