For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எந்த வீட்டு குழாயை திறந்தாலும் மினரல் வாட்டர்.. பூரி நகரில் வந்த அசத்தல் திட்டம்- ஒடிசா அரசு சாதனை

By Manoj Mishra
Google Oneindia Tamil News

புனித நகரமான பூரி விரைவான நகர்ப்புற மாற்றத்தின் எதிரொலிகளை சந்தித்துக் கொண்டுள்ளது. இந்த பட்டியலில் சமீபத்தியது முதல்வர் நவீன் பட்நாயக்கால் தொடங்கப்பட்ட ஒரு புதிய முயற்சி ஆகும். இது 'ட்ரிங்க் ஃப்ரம் டேப்' மிஷன் ('Drink from Tap') என்று அழைக்கப்படுகிறது, இந்த திட்டத்தால், ஒவ்வொரு வீட்டிற்கும் 24 மணி நேரமும் குடிநீர் குழாயிலிருந்து தரமான தண்ணீரை வழங்கும் இந்தியாவின் முதல் நகரமாக பூரி மாறுகிறது. 'ஐ.எஸ். 10500 தர நிர்ணயத்தை' உறுதி செய்வதோடு, நகரின் 2.5 லட்சம் மக்களுக்கும், ஆண்டுதோறும் புனித ஜகன்நாதர் ஆலயத்திற்கு வருகை தரும் 2 கோடி சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்த திட்டம் பயனளிக்கும்.

ஜகன்நாதர் குடிகொண்டிருக்கும், பூரியை உலகத் தரம் வாய்ந்த பாரம்பரிய நகரமாக மாற்ற வேண்டும் என்ற முதல்வர் நவீன் பட்நாயக்கின் கனவின் ஒரு பகுதிதான், இந்த திட்டம். இந்தியாவில் குழாயிலிருந்து நேரடியாக பாதுகாப்பான குடிநீரைப் பெறுவது ஒரு காலத்தில் சாத்தியமற்றது என்று நம்பப்பட்டது. இருப்பினும், ஒடிசா, 5T கவர்னன்ஸ் திட்டத்தின் கீழ் இது சாத்தியம் என்பதை நாட்டின் பிற பகுதிகளுக்கு காட்டியுள்ளது அந்த மாநிலம்.

Puri becomes first Indian city to provide mineral quality drinking water 24x7

லண்டன், டோக்கியோ, நியூயார்க் மற்றும் சிங்கப்பூர் போன்ற சர்வதேச நகரங்களில் குழாயில் சுத்தமான தண்ணீர் வருகிறது. அந்த பட்டியலில் இந்தியாவிலிருந்து முதல் முறையாக, புனித நகரான பூரி சேர்ந்துள்ளது. பாதுகாப்பான குடிநீருடன் 100% மீட்டர் பொருத்தப்பட்ட வீட்டு நீர் இணைப்புகளைக் கொண்ட நகரமாகவும் உள்ளது பூரி. இந்த முயற்சியால் 3 கோடி அளவுக்கு பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்துவது தவிர்க்கப்படும். இதனால் 400 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் தவிர்க்கப்படும்.

அபாதா திட்டத்தின் கீழ் இந்த புனித இடத்தின் புனிதத்தன்மை, பெருமை மற்றும் முக்கியத்துவத்தை இழக்காமல் அதேநேரம் ஏராளமான நவீன உள்கட்டமைப்பு திட்டங்கள் எச்சரிக்கையுடன் செயல்படுத்தப்படுகின்றன. முதல்வர் நவீன் பட்நாயக்கின் லட்சிய உந்துதல் மற்றும் முதல்வரின் செயலாளரும் 5T செயலாளருமான வி.கே.பாண்டியனின் அயராத முயற்சியும், இந்த திட்டத்தை முன்னெடுத்து 9 மாதங்களுக்குள் அதை ஒரு மிஷன் முறையில் முடிக்க உதவியது. 5T இன் தாரக மந்திரமான 'மாற்றம் உரிய காலத்தில்' என்பது இந்த திட்டத்திலும் முக்கியத்துவம் கொடுத்து செய்யப்பட்டது. இன்று பூரி நகரம், உலகத் தரம் வாய்ந்த பாரம்பரிய நகரமாக உலகளவில் ஒரு முத்திரையை உருவாக்க தயாராக உள்ளது. ஒரு நகரமாக பூரி சிறந்த பொருளாதாரம், சிறந்த வாழ்க்கைத் தரம், ஒரு நல்ல நிர்வாக அமைப்பு, இயக்கம், பாதுகாப்பான சூழல் மற்றும் குடிமை பங்களிப்பை வழங்கும் நவீன நகராட்சியைக் கொண்டதாக உருவாக்கப்பட்டு வருகிறது.

பூரி வாழ் மக்கள், முக்கிய பங்குதாரர்களாக, உலகத் தரம் வாய்ந்த நகரங்களுக்கு சமமான வாழ்க்கைத் தரத்தை மாற்றுவதற்கான விரிவான முயற்சிகளில் பங்கெடுக்கிறார்கள். 'சுஜல்' அல்லது 'ட்ரிங்க் ஃப்ரம் டேப்' பணி, அதன் 4.5 கோடி மக்களுக்காக மாநில அரசு உருவகம் செய்துள்ள மாற்றத்தின் வரையறைகளை சுமந்து வருகிறது.

பூரி தவிர, ஒடிசா முழுவதும் 16 லட்சம் மக்கள்தொகையை உள்ளடக்கிய 16 நகரங்களில் இந்த பணி வெற்றிகரமாக செயல்பாட்டுக்கு வர உள்ளது. 5டி கவர்னன்ஸ் தாரக மந்திரத்தின் கீழ் 'டிரிங்க் ஃப்ரம் டேப்' என்ற இந்த உருமாறும் முயற்சி, ஒடிசாவில் உள்ள ஒவ்வொரு 114 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் பாதுகாப்பான நீரை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

'சுஜல்' அல்லது 'டாப் ஃப்ரம் டேப்' பணி வெறுமனே நல்லாட்சியை வழங்குவதற்கான ஒரு விஷயம் அல்ல. அது அதையும் மீறி விரிவானது. முதல்வர் நவீன் பட்நாயக்கைப் பொறுத்தவரை, இது மிகவும் முக்கியமான மனிதம் சார்ந்த மற்றும் அவரது 4.5 கோடி மக்களின் நல்வாழ்வைப் பற்றியது. அந்த மாநிலத்தின் ஒரு குடும்பத் தலைவராக, அதுவே அவரை ஒவ்வொரு நாளும் உந்துகிறது.

( The writer is Secretary, Electronics & IT and Science & Technology, and OSD to the Honourable Chief Minister, Odisha. He can be reached at [email protected] )

English summary
The sacred city of Puri is witnessing a wave of rapid urban transformation. The latest in the list is a new transformative initiative launched by CM Naveen Patnaik called 'Drink from Tap' mission, making Puri, India's first city to provide 24x7 Drink-from-Tap quality water to every household. 'Drink from Tap' mission will ensure that the water supply adheres to "Quality Standards of IS 10500" and will benefit the city's 2.5 lakh population and 2 crore tourists who visit the holy Jagannath Dham annually.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X