• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

24 மணி நேரம் கெடு, 2 வாரத்தில் ரபேல் குண்டு.. மத்திய அரசை ஸ்தம்பிக்க வைத்த ராகுல் காந்தி

By Veera Kumar
|
  24 மணி நேரம் கெடு, 2 வாரத்தில் ரபேல் குண்டு.. ஸ்தம்பிக்க வைத்த ராகுல் காந்தி-வீடியோ

  டெல்லி: ரபேல் விவகாரத்தில் பெரிய ஊழல் நடந்துள்ளதாக ராகுல் காந்தி தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகிறார். அவர் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்திய நிலையில், மத்திய அரசு தரப்பில் மவுனம் நீடிக்கிறது.

  பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து 36 அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. விமானத்தின் பாகங்கள் ஒருங்கிணைப்பு பராமரிப்பு போன்ற ஒப்பந்தங்களை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு, மத்திய அரசு, கொடுத்துள்ளது.

  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிர்ணயம் செய்த விலையை காட்டிலும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, ரபேல் போர் விமானத்தை அதிக விலையில் வாங்குகிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

  மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது கூட காங்கிரஸ் தலைவர், ராகுல்காந்தி, ரபேல் தொடர்பாக விமர்சனம் செய்தார். ஆனால் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதை அவையிலேயே மறுத்தார்.

  களமிறங்கிய ராகுல் காந்தி

  இதனிடையே செய்தி நிறுவனம் ஒன்றிற்கு இரு தினங்கள் முன்பாக, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அளித்த சிறப்பு பேட்டியில், ரபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து ராகுல்காந்தி ட்விட்டரில் வரிசையாக வினாக்களை எழுப்பி எப்படி உள்ளார். 29ஆம் தேதி அவர் வெளியிட்ட ட்வீட்டில், ரபேல் கொள்ளை குறித்து மீண்டும் தேசத்தின் கவனத்தை ஈர்த்தமைக்கு ஜெட்லிக்கு நன்றி. ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும். ஆனால் இதில் பிரச்சனை என்னவென்றால், உங்களது உச்சபட்ச தலைவர், அவரது நண்பரை காப்பாற்றி வருகிறார். எனவே இது உங்களுக்கு அசவுகரியமாக தோன்றும். நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். 24 மணி நேரத்திற்குள் பதில் சொல்லுங்கள். என்று ராகுல்காந்தி தெரிவித்திருந்தார்.

  கிண்டல் செய்த ராகுல்

  இதையடுத்து நேற்று ராகுல் காந்தி வெளியிட்ட ட்வீட்டில், ரபேல் முறைகேடு தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்று உங்களுக்கு கொடுத்த கெடு நிறைவடைய இன்னும் ஆறு மணிநேரம் தான் உள்ளது. இளம் இந்தியா காத்துக் கொண்டுள்ளது. நீங்கள், மோடி மற்றும் அனில் அம்பானியை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். அவர்கள் ஏன் உங்களை கவனிக்க வேண்டும். நான் கேட்கும் கோரிக்கைக்கு ஒப்புதல் தரலாமே என்று தெரிவித்திருந்தார்.

  பாஸ் ஒப்புக்கொள்ளவில்லை

  இதையடுத்து நேற்று இரவு வெளியிட்ட ட்வீட்டில், உங்களது பாஸ், பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். நிறைய மறைக்க வேண்டியது உள்ளது. மக்களை சந்திக்க நிறைய பயப்பட வேண்டி உள்ளது என்பது தான் இதற்கு காரணம் என்று நான் கருதுகிறேன். இவ்வாறு கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார் ராகுல் காந்தி.

  விக்ரமாதித்தன்-வேதாளம் போல கேள்விகள்

  இன்று ராகுல் காந்தி வெளியிட்ட ட்வீட்டில், ரபேல் ஒப்பந்தம் உலகளாவிய ஊழல் என்றும், வேகமாகவும் தூரமாகவும் பறக்கும் ரபேல் விமானம், அடுத்த இரு வாரங்களுக்குள் பதுங்கு குழிகளையே அளிக்க கூடிய வெடிகுண்டுகளை வீசப்போகிறது என்று உவமையாக தெரிவித்துள்ளார். இதுவரை அருண் ஜேட்லி ராகுல் காந்தி கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ராகுல் காந்தி இன்று நேற்றல்ல கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியாக, ரபேல் விவகாரத்தில் பெரிய ஊழல் நடந்துள்ளதாக தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகிறார். ஆனால், அந்த ஒப்பந்த விவகாரம் ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்று ஒப்பந்த ஷரத்தில் உள்ளதாக கூறி, விவரங்களை மத்திய அரசு வெளியிட மறுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

  lok-sabha-home

   
   
   
  English summary
  Congress President Rahul Gandhi on Friday continued to attack Prime Minister Narendra Modi over Rafale deal. "Globalised corruption. This Rafale aircraft really does fly far and fast! It's also going to drop some big bunker buster bombs in the next couple of weeks," said Rahul Gandhi.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more