For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நல்லா ராமர் பெயரை வச்சி அரசியல் பண்றீங்க.. அவரை மாதிரி வாழ்றீங்களா.. நறுக்கென கேட்ட ராகுல் காந்தி

Google Oneindia Tamil News

போபால்: பாஜகவினரும், ஆர்எஸ்எஸ் அமைப்பினரும் ராமரை போற்றுவதாக சொல்கிறார்களே தவிர, அவரை போன்று இவர்கள் வாழவில்லை என ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

மேலும், சீதையின் மரியாதைக்காக ராமர் போராடினார் என்றும் ஆனால் இவர்கள் பெண்களின் உரிமைக்காகவும், மரியாதைக்காகவும் போராடவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற 'பாரத் ஜடோ யாத்திரையில்' ராகுல் காந்தி இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.

நாய் போல் சாவேனாம்.. ராவணன், ஹிட்லர்! காங்கிரஸ் தலைவர்கள் போட்டிபோட்டு திட்டுறாங்க - “எமோசன்”ஆன மோடி நாய் போல் சாவேனாம்.. ராவணன், ஹிட்லர்! காங்கிரஸ் தலைவர்கள் போட்டிபோட்டு திட்டுறாங்க - “எமோசன்”ஆன மோடி

 பாஜக

பாஜக

2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸை வலுப்படுத்தும் விதமாக கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி தொடங்கிய 'பாரத் ஜடோ யாத்திரை' 86வது நாளான நேற்று மத்தியப் பிரதேசத்தின் அகர் மால்வா பகுதிக்கு வந்து சேர்ந்தது. அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பாஜகவினரும், ஆர்எஸ்எஸ் அமைப்பினரும் ராமரை போற்றுவதாக சொல்கிறார்களே தவிர, அவரை போன்று இவர்கள் வாழவில்லை என விமர்சித்துள்ளார். மேலும் அவர் பேசியதாவது, "மத்தியப் பிரதேசத்தில் நாங்கள் பாத யாத்திரை மேற்கொண்டிருந்த போது என்னை ஒரு பாதிரியார் வந்து சந்தித்தார். அவர் என்னிடம் காந்தி அடிக்கடி உச்சரிக்கும் 'ஹே ராம்' எனும் வார்த்தையை கூறி அதற்கு விளக்கமும் அளித்தார்.

 ஆர்எஸ்எஸ்

ஆர்எஸ்எஸ்

அதாவது, 'ஹே ராம்' என்பது வெறும் வார்த்தைகள் அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. அன்பு, சகோதரத்துவம், மரியாதை மற்றும் தவம் ஆகியவற்றை இது உள்ளடக்கியுள்ளது. அதேபோல 'ஜெய் சியா ராம்' என்பதுதான் உண்மையான ஜெப வார்த்தைகள். ஆனால் நாம் அதை 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று உச்சரித்து வருகிறோம். 'ஜெய் சியா ராம்' என்றால், சீதையும் ராமரும் ஒன்று என்றும், ராமர் சீதைக்காக போராடினார் என்பதுதான் அவர் கொடுத்த விளக்கம். ஆனால் தற்போது நிலைமை எப்படி இருக்கிறது தெரியுமா? ராமரின் பெயரை உச்சரிக்கும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பெண்களின் மரியாதைக்காக போராடுவதில்லை. அவர்கள் ராமரின் வழியில் நடப்பதில்லை" என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி

தொடர்ந்து பேசிய அவர், "விவசாயிகள் பெற்ற ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.1 லட்சம் கடனுக்காக கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். ஆனால் ஆயிரம் கோடி கணக்கில் கடன் வாங்கியவர்கள் நாட்டை விட்டு எளிதாக வெளியேறி விடுகிறார்கள். மறுபுறத்தில் கல்விக்கடன் பெற்று மக்கள் தங்கள் குழந்தைகளை பொறியியல் கல்வியை படிக்க வைக்கின்றனர். ஆனால், படித்து முடித்து வெளியே வந்தால் உரிய வேலை கிடைப்பதில்லை. அவர்கள் கூலி வேலைக்கு தள்ளப்படுகிறார்கள். சிறு குறு வணிகங்கள் வேலை வாய்ப்புக்கு ஆதாரமாக இருந்தன. ஆனால் ஜிஎஸ்டி வந்த பின்னர் இந்த தொழில்கள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன.

காங்கிரஸ்

காங்கிரஸ்

அதேபோல பொதுத்துறை நிறுவனங்களும் வேலை வாய்ப்புக்கான ஆதாரமாக இருந்தன. ஆனால் தற்போது மருத்துவமனைகள், பள்ளிகள் உட்பட அனைத்தும் தனியார் மயமாக்கப்பட்ட பின்னர் இளைஞர்களுக்கான வேலை என்பது பெரும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பெட்ரோல் லிட்டர் ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது இது ரூ.107க்கு விற்பனை செய்யப்படுகிறது. கேஸ் சிலிண்டரும் ரூ.1,000க்கு விற்பனையாகிறது. சாமானிய மக்களின் பாக்கெட்டுகளிலிருந்து பணம் எடுக்கப்பட்டு அது பெருமுதலாளிகளின் பாக்கெட்டுகளில் கொட்டப்படுகிறது" என்று தொடர் குற்றச்சாட்டுகளை ராகுல்காந்தி முன்வைத்திருந்தார்.

English summary
Rahul Gandhi has criticized BJP and RSS organizations as saying that they worship Lord Rama, but they do not live like him. He also alleged that Rama fought for the honor of Sita but they did not fight for the rights and honor of women. Rahul Gandhi made these allegations during the 'Bharat Jado Yatra' held in Madhya Pradesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X