காஷ்மீரில் நடக்க கூடாது.. பாரத் ஜோடோ யாத்திரை ராகுலுக்கு பறந்த எச்சரிக்கை.. பரபர தகவல்.. என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

ஜம்மு காஷ்மீர்: ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை ஜம்மு காஷ்மீருக்குள் நுழைய உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அச்சுறுத்தல் காரணமாக காஷ்மீரில் ராகுல் காந்தி பாதயாத்திரைக்கு பதில் கார் யாத்திரை செல்ல பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளதாகவும், இந்த அறிவுரையின் பின்னால் உள்ள முக்கிய தகவல்களும் வெளியாகி உள்ளன.

கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்ற பெற்ற நிலையில் காங்கிரஸ் பெரிய அளவில் சரிவை சந்தித்தது. அதன்பிறகு தொடர்ந்து பல தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து வருகிறது. இந்நிலையில் தான் 2024 நாடாளுமன்ற தேர்தலில் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது.

சோனியா காந்தி அவ்வப்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் காங்கிரஸ் தேசிய தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது ஒருபுறம் இருக்க பாட்டி, தந்தை, தாய் வழியில் காங்கிரஸ் கட்சியை மீண்டும் பலப்படுத்தி மத்தியில் ஆட்சி கட்டிலில் அமர்த்துவது ராகுல் காந்தி மற்றும் அவரது தங்கை பிரியங்கா காந்தி ஆகியோரின் பொறுப்பாக மாறியுள்ளது.

ராகுல் காந்தி யாத்திரை

ராகுல் காந்தி யாத்திரை

இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியை மீட்டெடுக்கும் முயற்சியில் ராகுல் காந்தி ஈடுபட்டுள்ளார். பாஜக வெறுப்பை பரப்பி பிரித்தாளும் சூழ்ச்சி செய்கிறது. இதனால் இந்தியாவை ஒற்றுமைப்படுத்த வேண்டும் எனக்கூறி ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடங்கி உள்ளார். பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை துவக்கி உள்ளார். 2022 செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தி பாதயாத்திரை துவக்கினார். இந்த யாத்திரை 12 மாநிலம், 2 யூனியன் பிரதேசம் வழியாக 150 நாட்களில் ஜம்மு காஷ்மீரை அடைய உள்ளது.

ஜம்மு காஷ்மீர் அச்சுறுத்தல்

ஜம்மு காஷ்மீர் அச்சுறுத்தல்

தற்போது இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானாவை கடந்து பதர்பூர் எல்லை வழியாக கடந்த 24ம் தேதி தலைநகர் டெல்லியை அடைந்தது. அதன்பிறகு மீண்டும் பாதயாத்திரை ஜனவரி 3ல் துவங்கியது. டெல்லியில் இருந்து துவங்கிய பாதயாத்திரை பஞ்சாப் வழியாக ஜம்மு காஷ்மீரை அடைய உள்ளது. ஜம்மு காஷ்மீரின் சில இடங்களில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உள்ளன. இதனால் ஜம்மு காஷ்மீரில் ராகுல் காந்தியின் பாதுகாப்பு கவனமாக மேற்கொள்ள வேண்டும் என பாதுகாப்பு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கான திட்டங்களை பாதுகாப்பு அதிகாரிகள் வகுத்துள்ளனர்.

காரில் செல்ல அறிவுரை

காரில் செல்ல அறிவுரை

இதுபற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரி கூறுகையில், ‛‛காஷ்மீர் செல்லும் ராகுல் காந்தியை பாதுகாக்க விரிவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக சில இடங்களில் அவர் நடந்து செல்ல வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இந்த இடங்களில் காரில் பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இரவில் அவர் தங்க உள்ள இடங்களில் கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. ஜனவரி 26ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பனிஹாலில் ராகுல் காந்தி தேசியக்கொடி ஏற்ற உள்ளார். அதன்பிறகு ஜனவரி 27 ம் தேதி அனந்த்நாக் வழியாக ஸ்ரீநகருக்குள் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை நுழைய உள்ளது. மேலும் ராகுல் காந்தியுடன் செல்லும் நபர்களை காங்கிரஸ் கட்சியினர் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளோம்'' என்றார்.

இசட் பிளஸ் பாதுகாப்பில் ராகுல்

இசட் பிளஸ் பாதுகாப்பில் ராகுல்

ராகுல் காந்தி தற்போது இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ளார். இது இந்தியாவின் 2வது உயர்ந்த பாதுகாப்பு பிரிவாகும். அதன்படி 55 பேர் குழு பாதுகாப்பு பணியில் ஈடுபடும். இதில் 8 முதல் 9 பேர் வரை தேசிய பாதுகாப்பு படையினர் அல்லது கமாண்டோக்களாக இருப்பார்கள். இதுதவிர இந்த குழுவில் சிஆர்பிஎப், போலீஸ் அதிகாரிகள் இடம்பெறுவார்கள். இவர்கள் நவீன பயிற்சிகளை பெற்றுள்ள நிலையில் தான் தற்போது ராகுல் காந்தியின் பாதுகாப்பு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

சமீபத்தில் டெல்லியில் அவர் யாத்திரை சென்றபோது பாதுகாப்பில் குளறுபடி நடந்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக காங்கிரஸ் புகார் அளித்ததோடு, காஷ்மீரில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுப்படி பாதுகாப்பு குழுவினர் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில் ராகுல் காந்தியே பாதுகாப்பு விதிகளை மீறுவதாகவும், இதுவரை 100 முறை மீறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடதக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+