வெறுப்பவர்களையும் நேசிக்கிறேன்... மீட்கப்பட்ட டுவிட்டர் பக்கத்தில் ராகுல் !

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தை புதன்கிழமை மர்ம நபர்கள் முடக்கினர். இதையடுத்து மீட்கப்பட்ட தனது டுவிட்டர் பக்கத்தில் 'என்னை வெறுப்பவர்களையும் நேசிக்கிறேன்' என்று அவர் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலின் டுவிட்டர் பக்கத்தில் புதன்கிழமை இரவு 8.45 மணிக்கு அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் சில ஆபாசமான கருத்துக்களை பதிவிட்டிருந்தனர். பெரும் போராட்டத்திற்கு பின்னர் சுமார் 1 மணி நேரத்தில் ராகுலின் டுவிட்டர் கணக்கு மீட்கப்பட்டது. விஷமிகளின் இந்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Rahul Gandhi Is Back On Twitter

இதனிடையே காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கையும் நேற்று காலை விஷமிகள் முடக்கிவிட்டனர். சுமார் 12 மோசமான டிவிட்டுகளை விஷமிகள் வெளியிட்டனர். பின்னர் அரை மணி நேரத்தில் அந்த டுவிட்டர் பக்கம் சரிசெய்யப்பட்டது.

இந்த நிலையில் மீட்கப்பட்ட தனது டுவிட்டர் பக்கத்தில் வியாழக்கிழமை முதல் பதிவிட்ட ராகுல் 'என்னை வெறுப்பவர்கள் ஒவ்வொருவரையும் நேசிக்கிறேன். நீங்கள் அனைவரும் இனிமையானவர்கள்' என்று பதிவிட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
"To everyone of you haters out there: I love all of you. You're beautiful. Your hatred just doesn't let you see it yet," Rahul Gandhi said on his twitter
Please Wait while comments are loading...