For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சர்ச்சை புகாருக்குப் பிறகு ராகுல் காந்தியின் வேட்பு மனு ஏற்பு

Google Oneindia Tamil News

அமேதி: ராகுல் காந்தி அமேதி தொகுதியில் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் களவித தகுதி மற்றும் குடியுரிமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டதால் அவரது மனு மீது விசாரணை நடைபெற்றது. விசாரணைக்குப் பின்னர் மனு ஏற்கப்பட்டது.

ராகுல்காந்தி இம்முறை அமேதி மற்றும் கேரளாவில் உள்ள வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில் அமேதி தொகுதியில் அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள கல்வித் தகுதி மற்றும் குடியுரிமை குறித்து அமேதி தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

Rahul Gandhis nomination paper accepted

ராகுலின் வேட்புமனு மீது கேள்வி எழுப்பியுள்ள அந்த சுயேச்சை வேட்பாளர் ராகுல் பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர் என்று பிரிட்டன் நாட்டு இணையதளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது என்றும் அதே இணைய தளம் ராகுலின் கல்வி குறித்தும் குறிப்பிட்டுள்ளது. அங்கு குறிப்பிட்டுள்ள கல்வித் தகுதி அவர் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளதோடு வேறுபடுகிறது. ஆகவே அவரது வேட்புமனு மீது விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த சுயேச்சை வேட்பாளர் கோரியுள்ளார்.

சுயேச்சை வேட்பாளரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமேதி தொகுதியின் தேர்தல் அலுவலர் கடந்த சனிக்கிழமை விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார். விசாரணையின்போது ராகுலின் வழக்கறிஞர் திங்கள்கிழமை வரை அவகாசம் கேட்டு இருந்தார். அதனால் இன்று வரை அவகாசம் வழங்கப்பட்டது. இன்று விசாரணைக்குப் பின்னர் மனு ஏற்கப்பட்டது.

 தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை.. சென்னைக்கு மிக அருகில் சூறாவளியுடன் கூடிய மழை! தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை.. சென்னைக்கு மிக அருகில் சூறாவளியுடன் கூடிய மழை!

இந்நிலையில் தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி ஒரு வேட்பாளரின் வேட்புமனு மீது கிளம்பும் ஆட்சேபனை குறித்து பாதிக்கபப்ட்டவரை அழைத்து தேர்தல் அதிகாரி விசாரிக்க வேண்டும். அதோடு அதற்கான ஆதாரங்களையும் கேட்கலாம் ஆனால், அதன் உண்மைத்தன்மையை ஆணையம் நேரடியாக விசாரிக்க முடியாது. இப்படி கொடுக்கப்படும் ஆதாரங்கள் பொய் என தெரிந்தால் பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்திற்கு அணுகுவது தான் முறையாகும்.

நிலைமை இப்படி இருந்தாலும் எதிர்கட்சியான பாஜக இதை கையில் எடுத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக செய்தி தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மா ராவ் இதில் ராகுலின் வழக்கறிஞர் கால அவகாசம் கேட்டது ஆச்சரியத்தை அளிக்கிறது. ராகுல் மீதான கடும் குற்றச்சாட்டுக்களுக்கு அவர் உடனடியாகப் பதில் அளிப்பது அவசியம். அவர் பிரிட்டன் குடியுரிமை பெற்றிருந்தாரா இல்லையா என்பது குறித்தும் அதன் உண்மையத்தன்மையை குறித்தும் ராகுல் விளக்க வேண்டும்.' எனத் தெரிவித்துள்ளார்.

ராகுல் 2004-ல் ஒரு பிரிட்டன் நிறுவனத்தின் பங்குகளை பெற்றுள்ளார். அப்போது அவர் பிரிட்டன் குடியுரிமை பெற்றதாகவும், எம்பில் பயின்றது பொருளாதாரத்திலா அல்லது வளர்ச்சித்துறையிலா என்பதிலும் இருவேறு கருத்துகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

English summary
Congress president Rahul Gandhi's nomination paper has been accepted by Amethi electoral officer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X