For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரயில் டிக்கெட்டில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையில் புதிய முறை அமல்!

ரயில் டிக்கெட்டில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையில் புதிய முறையை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ரயில் டிக்கெட்டில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் கட்டண சலுகையில் புதிய முறையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தற்போதைய நிலையில் மூத்த குடிமக்களுக்கான ரயில் டிக்கெட்டுகளில் ஆண்களுக்கு 40% பெண்களுக்கு 50% சலுகை அளிக்கப்படுகிறது. இதனால் ரயில்வே துறைக்கு ஆண்டுதோறும் ஏற்படும் இழப்பு ரூ1,300 கோடி.

Railways to offer senior citizens option of availing half concession

இந்த இழப்பைக் குறைக்க மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையில் புதிய முறையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி டிக்கெட் முன்பதிவு செய்யும் மூத்த குடிமக்களிடம், கட்டணத்தில் பாதி சலுகை வேண்டுமா? முழுமையாக வேண்டுமா? என்கிற ஒரு கேள்வி முன்வைக்கப்படும்.

இதற்கு மூத்த குடிமக்கள் தரும் பதிலைப் பொறுத்து டிக்கெட்டுகள் வழங்கப்படும். இந்த நடைமுறையால் ரயில்வே துறைக்கான இழப்பு சற்று குறையும் என கூறப்படுகிறது. இது விரைவில் நடைமுறைக்கு வரும் என்கின்றன ரயில்வே வட்டாரங்கள்.

English summary
Senior citizens will now have the option to either avail full concession or half of it when they book train tickets. The move is aimed at reducing the Rs 1,300 crore subsidy burden in the senior citizenship category.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X