அடடே ஆச்சரியம்.. குளிர்காலத்தில் பெங்களூரை குளிப்பாட்டிய மழை

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் இன்று மாலை முதல் பெய்து வரும் மழையால் மக்கள் பெரும் ஆச்சரியமடைந்துள்ளனர். வழக்கத்திற்கு மாறாக குளிர்காலமான பிப்ரவரியில் இந்த மழை பெய்வதே இதற்கு காரணம்.

சில தனியார் வானிலை ஆய்வு அமைப்பினர் நேற்றே இதுகுறித்த கணிப்புகளை வெளியிட்டிருந்தனர். மேக சுழற்சி காரணமாக பெங்களூரில் புதன்கிழமை மாலையில் மழை பெய்யக்கூடும் என்றும், பிப்ரவரியில் பெங்களூரில் மழை பெய்வது அரிது என்றபோதிலும், மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

Rain lashes Bengaluru

இந்த நிலையில், இன்று காலை சில மணி நேரம் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் 5 மணியளவில் மழை பெய்ய ஆரம்பித்தது. பெங்களூரின் வடக்கு பகுதிகளான எலகங்கா, மல்லேஸ்வரம், மேற்கு பகுதியான விஜயநகர், மைசூர் சாலை, மத்திய பகுதிகளான மெஜஸ்டிக், ஜெயநகர், தெற்கு பகுதிகளான கோரமங்களா, மடிவாளா, பொம்மனஹள்ளி, ஒசூர் சாலை மற்றும் பன்னேருகட்டா சாலை உள்ளிட்ட நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது.

Rain lashes Bengaluru

அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய கூடும், சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும், என்று வானிலை இலாகா தெரிவித்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
People have been surprised by the rains that showers in Bangalore this evening. Rains in first week of Feb is very rare. However there is a good rain now.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற