அமைச்சரானார் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா.. குஜராத்தில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
காந்தி நகர்: குஜராத் முதல்வராக இருக்கும் பூபேந்திர படேலை தவிர்த்து மற்ற அனைத்து அமைச்சர்களும் திடீரென்று ராஜினாமா செய்துள்ளனர். இதையடுத்து புதிதாக 25 பேர் இன்று அமைச்சராக பதவியேற்றனர். இந்த அமைச்சரவையில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக பூபேந்திர படேல் உள்ளார். இவரது அமைச்சரவையில் மொத்தம் 16 பேர் அமைச்சர்களாக இருந்தனர். முதல்வர் பூபேந்திர படேலை சேர்த்தால் அமைச்சர்களின் எண்ணிக்கை மொத்தம் 17 ஆகும்.

இந்நிலையில் தான் நேற்று திடீரென்று முதல்வர் பூபேந்திர படேலை தவிர்த்து 16 அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். குஜராத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல் 2017 ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தல்களில் வெற்றி பெறும் வகையில் குஜராத் அமைச்சரவையை மாற்றியமைக்க பாஜக மேலிடம் முடிவு செய்தது. இதையடுத்து அமைச்சர்கள் அனைவரும் நேற்று ராஜினாமா செய்தனர். அதன்பிறகு இன்று புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.
குஜராத் தலைநகர் காந்தி நகரில் உள்ள மகாத்மா மந்தீரில் நடந்த விழாவில் குஜராத்ஆளுநர் ஆச்சார்யா தேவ்ராத் புதிய அமைச்சர்களும் பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா புதிய அமைச்சராக பதவியேற்று கொண்டார். ரிவாபா ஜடேஜா ஜாம்நகர் வடக்கு தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக உள்ளார். கடந்த 2022ம் ஆண்டு நடந்த தேர்தலில் முதல் முறையாக அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 3 ஆண்டுகளாக அவர் எம்எல்ஏவாக செயல்பட்டு வரும் நிலையில் இன்று முதல் அமைச்சர் அவதாரம் எடுத்துள்ளார்.
ரிவாபா ஜடேஜாவுக்கு தற்போது 34 வயது ஆகிறது. இவர் கடந்த 2019ம் ஆண்டில் பாஜகவில் சேர்ந்தார். ரிவாபா முதல் முறை எம்எல்ஏவாக இருக்கும் சூழலில் அமைச்சர் பதவியை எட்டிப்பிடித்துள்ளார். இதனால் அவர் குஜராத் அரசியலில் முக்கியத்துவம் பெற்று வலம் வரலாம் என்கின்றனர் பாஜகவினர். ரவீந்திர ஜடேஜா - ரிபாவா ஜடேஜாவுக்கு ஒரு மகள் உள்ளார்.அவரது பெயர் நித்யானா.
அதேபோல் பாஜகவின் ஹர்ஷ்சங்கவி துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இவர் முந்தைய அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தார். இவரை போல் முந்தைய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ரிஷிகேஷ் படேல், கனுபாய் தேசாய், குன்வார்ஜி பவாலியா, பிரஃபுல் பன்செரியா, பர்சோத்தம் சோலங்கி ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அமைச்சரவை எடுத்து கொண்டால் 8 அமைச்சர்கள் ஓபிசி பிரிவை சேர்ந்தவர்கள். 6 பேர் படிதார் சமுதாயத்தை பிரிவை சேர்ந்தவர். 4 பேர் பழங்குடியினர் பிரவை சேர்ந்தவர். 3 பேர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். 2 பேர் ஹிஸ்தாரியாஸ் பிரிவை சேர்ந்தவர்கள். இவர்கள் தவிர பிராமணர் மற்றும்ஜெயின் (லகுமதி) பிரிவினருக்கு தலா ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
குஜராத்தை எடுத்து கொண்டால் அங்கு மொத்தம் 182 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதன்படி பார்த்தால் 15 சதவீத எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்கலாம். அதாவது எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் குஜராத்தில் முதல்வர் உள்பட மொத்தம் 27 பேர் அமைச்சர்களாக இருக்கலாம். இதற்கு முன்பு முதல்வர் உள்பட 17 பேர் வரை மட்டுமே அமைச்சர்களாக இருந்தனர். இதில் 8 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், மற்றவர்கள் அமைச்சர்களாகவும் செயல்பட்டனர். 11 இடங்கள் காலியாக வைக்கப்பட்டன.
இந்நிலையில் தான் தற்போதைய அமைச்சரவை மாற்றத்தின்பாது 25 பேர் அமைச்சர்களாகி உள்ளனர். முதல்வர் பூபேந்திர படேலை சேர்த்தால் மொத்த எண்ணிக்கை 26 ஆக உள்ளது. இதன்மூலம் இன்னும் ஒரு இடம் மட்டுமே அமைச்சரவையில் காலியாக உள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications