For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆயிரம் ரூபாய் நோட்டில் புதுசா ஒரு மேட்டரை சேர்க்கிறது ஆர்பிஐ.. என்னன்னு தெரியுமா?

Google Oneindia Tamil News

மும்பை: ஆயிரம் ரூபாய் நோட்டின் இரண்டு பக்கங்களிலும், எண்களுக்கான பகுதியில் ‘ஆர்' என்ற எழுத்து பதியப் பெற்ற புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிடவுள்ளது ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா.

இந்தப் புதிய ஆயிரம் ரூபாய் நோட்டில் வழக்கம்போல, ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா கவர்னர் ரகுராம் ராஜனின் கையெழுத்து இடம் பெற்றிருக்கும். கூடவே 2016 (வருடம்) என்பது வலமிருந்து இடமாக அச்சிடப் பட்டிருக்கும்.

RBI to issue 1000 banknotes with inset letter R

இது தவிர வழக்கம்போல மற்ற ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் இருப்பது போன்ற அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் இந்த புதிய நோட்டுகளிலும் இடம் பெற்றிருக்கும்.

இந்தப் புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுக்களானது, ஏறக்குறையை கடந்த 2005ம் ஆண்டு வெளியான மகாத்மா காந்தி வரிசை நோட்டுகளை ஒத்திருக்கும் என ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தாலும் கூட, மற்ற பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் வழக்கம்போல புழக்கத்தில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The Reserve Bank will shortly issue banknotes of Rs 1,000 denominations with inset letter 'R' in both the number panels.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X