தமிழகத்திற்கு 2000 கன அடி நீர் திறந்துவிட சுப்ரீம் கோர்ட் உத்தரவு.. கடைபிடிக்குமா கர்நாடகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: காவிரியில் வினாடிக்கு 2000 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு கர்நாடகத்துக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவிரி நதி நீர் பிரச்சனை தொடர்பான வழக்கு பிப்ரவரி 7ஆம் தேதி முதல் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும், ஒவ்வொரு தரப்பும் வாதத்தை முன்வைக்க ஏதுவாக 3 வாரம் அவகாசம் அளிக்கப்படும் என்றும் சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

Release 2,000 cusecs of Cauvery water to TN, SC tells Karnataka

அதன்படி பிப்ரவரி 7ம் தேதி தொடங்கிய காவிரி வழக்கு விசாரணை நீதிபதி தீபக் மிஸ்ரா, அமிதவராய் கன்வில்கர் அமர்வு முன்பு தொடர்ந்து நடைபெற்று வந்தது.

மீண்டும் இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு கர்நாடக அரசிற்கு வினாடிக்கு 2000 கன அடி நீரை காவிரியிலிருந்து தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக அரசு காவிரி நதி நீரை தமிழகத்திற்கு தொடர்ந்து வழங்காமல் இருப்பது குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட், இந்த வழக்கின் இறுதி விசாரணையை ஜுலை 11ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Supreme Court on Tuesday ordered Karnataka to continue releasing 2,000 cusecs of Cauvery water to Tamil Nadu on a daily basis.
Please Wait while comments are loading...