For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தல் நேரமா இருக்கு... மம்தா வாழ்க்கை வரலாற்று படத்தின் டிரைலரை நீக்குக.. தேர்தல் ஆணையம்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தின் டிரைலரை இணையத்தில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மம்தா பானர்ஜியின் வாழ்க்கையை மையமாக வைத்து பாகினி- பெங்கால் டைக்கிரஸ் (Baghini- Bengal Tigress) என்ற பெங்காலி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நேஹல் தத்தா என்பவர் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் ரூமா சக்கரபோர்த்தி என்பவர் மம்தா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Remove the trailer of Mamtas biographical film, Election Commission orders

இந்த திரைப்படம் அடுத்த மாதம் 3ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை இந்த திரைப்படத்தை வெளியிட உத்தரவிட கூடாது என்று பா.ஜ.க சார்பில் மேற்கு வங்க மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் பாகினி திரைப்படத்தின் டிரைலரை இணையத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இதே போல், பி.எம். நரேந்திர மோடி என்ற பெயரில், மோடியின் வாழ்க்கை வரலாற்று படம் வெளியிட தடை விதிக்குமாறு, உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

மக்களவை தேர்தலில் சீட் தராமல் ஏமாற்றிய பாஜக.. காங்கிரசுக்கு தாவிய எம்.பி. உதித் ராஜ் மக்களவை தேர்தலில் சீட் தராமல் ஏமாற்றிய பாஜக.. காங்கிரசுக்கு தாவிய எம்.பி. உதித் ராஜ்

தேர்தல் நேரம் என்பதால், படத்தை பார்த்து விட்டு, தேர்தல் ஆணையம் படத்தை வெளியிடுவதா என்பதை உறுதி செய்யுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. அதே போன்று, மோடியை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள 5 அத்தியாயங்களை கொண்ட வெப் சீரிஸ்க்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

English summary
Election time, Remove the trailer of Mamta's biographical film, Election Commission orders
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X