For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சபரிமலை: மண்டலபூஜை, மகரபூஜை சீசன் வருவாய் இதுவரை வெறும் ரூ4.08 கோடிதானாம்!

Google Oneindia Tamil News

பம்பை: சபரிமலையில் மண்டல பூஜை, மகரபூஜை சீசனில் மொத்த வருவாயே வெறும் ரூ4.08 கோடிதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் மண்டல பூஜை, மகர பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பக்தர்கள் கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நடை திறந்தது முதல் டிசம்பர் 8-ந் தேதி வரையிலான முதல் 23 நாட்களில் 44,000 ஐயப்ப பக்தர்கள்தான் வருகை தந்துள்ளனர்.

கடந்த காலங்களை ஒப்பிடுகையில் பக்தர்கள் எண்ணிக்கை மிக மிக குறைவாகும். கடந்த மண்டல பூஜை, மகர பூஜை சீசனில் சபரிமலை ஐயப்பன் கோவில் வருமானம் ரூ82 கோடியாக இருந்தது. இந்த சீசனில் தற்போது வரை வெறும் ரூ4.08 கோடிதான் வருவாய் கிடைத்துள்ளது.

சபரிமலையில் பரவும் கொரோனா - ஊழியர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடு சபரிமலையில் பரவும் கொரோனா - ஊழியர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடு

பத்தனம்திட்டா கடைகள் மூடல்

பத்தனம்திட்டா கடைகள் மூடல்

சபரிமலையில் மட்டும் அல்ல ஐயப்ப பக்தர்கள் சீசன் காலத்தில் களைகட்டி இருக்கும் பத்தனம்திட்டா மாவட்டம் முழுவதுமே வெறிச்சோடிய நிலைதான் காணப்படுகிறது. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனிடையே நிலக்கல் வருவதற்கு முன்னதாக ஆன்லைனில் மூலம் தரிசனத்துக்கு பக்தர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

கட்டாயம் முன்பதிவு அவசியம்

கட்டாயம் முன்பதிவு அவசியம்

அப்படி முன்பதிவு செய்யாமல் வருகை தரும் பக்தர்கள் அங்கிருந்தே திருப்பி அனுப்பப்பட்டும் வருகின்றனர். சபரிமலை மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் வசிப்பவர்கள் அனைவரும் 14 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனையை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் கூடுதலாக அனுமதி

பக்தர்கள் கூடுதலாக அனுமதி

சபரிமலையில் தொடக்கத்தில் நாள்தோறும் 1,000 பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் நாளொன்றுக்கு 2,000 பக்தர்கள் வீதம் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா சான்றிதழ் கட்டாயம்

கொரோனா சான்றிதழ் கட்டாயம்

கொரோனா இல்லை என்கிற நெகட்டிவ் சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே சந்நிதானத்துக்கு யாத்திரையாக செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக நிலக்கல்லிலும் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நடப்பாண்டு கட்டுப்பாடுகள்

நடப்பாண்டு கட்டுப்பாடுகள்

கடந்த காலங்களைப் போல பெருவழிப்பாதை, புல்லுமேடு பாதை வழியாக இம்முறை ஐயப்ப பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. சுப்பிரமணிய பாதை வழியாக மட்டுமே சபரிமலைக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல் பம்பை நதியில் இந்த முறை நீராட அனுமதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Revenue collection at Sabarimala only Rs4.08cr in first 23 days of this season.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X