தமிழக ஆளுநர் ரோசய்யா சீமாந்திராவுக்கு கிளம்ப வேண்டிய நேரம் வந்தாச்சு!
டெல்லி: மோடி அரசு அமைந்ததும், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட 18 கவர்னர்களின் பதவிகளை பறிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து இவர்கள் ராஜினாமா கடிதங்களைத் தர தயாராகி வருகின்றனர்.

பாஜக அரசுக்கு குடைச்சல்...
மத்தியில் காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தபோது, ஊழல் குற்றச்சாட்டுகளால் பதவி விலகிய மாநில முதல்வர்கள் சிலருக்கு கவர்னர் பதவி அளித்தது. மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் பாஜக ஆளும் மாநிலங்களில் ஆட்சிக்கு எதிராக அவ்வப்போது குடைச்சல் கொடுத்தனர். இதையெல்லாம் கூட்டி கழித்து பார்த்துள்ள பாஜக, தங்களது ஆட்சி வந்ததும் காங்கிரஸ் அரசு நியமித்த 18 ஆளுநர்களை நீக்க திட்டமிட்டுள்ளது.

முதலிடத்தில் ஷீலா...
இந்த பட்டியலில் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் முதலிடத்திலுள்ளார். டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் நடந்த ஊழலில் ஷீலா தீட்சித்துக்கு தொடர்புள்ளதாக செய்திகள் வெளியாகிய நிலையில், அவர் கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனால் எந்த ஒரு விசாரணை கமிஷனாலும் அவருக்கு எதிராக புகாரை விசாரிக்க முடியாமல் போனது.

சிவராஜ் பாட்டீலும் பாஜகவின் ஹிட் லிஸ்டில்...
காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழலை மீண்டும் தோண்டி எடுத்து நடவடிக்கை எடுக்க பாஜக முடிவு செய்துள்ளது. எனவே முதலில் கேரள ஆளுநர் பதவியில் இருந்து ஷீலாவை நீக்கிவிட்டு அதன்பிறகு அவருக்கு எதிராக நடவடிக்கையை தொடங்க திட்டமிட்டுள்ளது. முன்னாள் உள்துறை அமைச்சரும், பஞ்சாப் ஆளுநருமான சிவராஜ் பாட்டீலும் பாஜகவின் ஹிட் லிஸ்டிலுள்ளார். இவர் அமைச்சராக இருந்தபோது, பாஜக ஆட்சியில் நியமித்த ஆளுநர்கள் நால்வரை நீக்குவதில் முக்கிய பங்காற்றியவர் என்பதால், அவர் மீது பாஜக கோபத்திலுள்ளது.

பரத்வாஜ் ஓய்வு பெறுகிறார்.. ஆனால்...
அதே நேரம் பாஜக ஆட்சிக்கு அதிக தொல்லை கொடுத்த கர்நாடக ஆளுநர் பரத்வாஜ் அடுத்த மாதம் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். இவர் தான் கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா பதவி விலக முக்கியக் காரணமாக இருந்தவர். இதனால், ஓய்வுக்கு முன்பே அவரை நீக்க வேண்டும் என எடியூரப்பா தரப்பு நெருக்குகிறது.

தமிழக ஆளுநர் ரோசய்யா..
ராஜஸ்தான் ஆளுநர் மார்கரெட் ஆல்வா, ஓடிசா ஆளுநர் எஸ்.சி.ஜாமீர், மத்திய பிரதேச ஆளுநர் ராம் நரேஷ்யாதவ், தமிழக ஆளுநர் ரோசய்யா, ஜார்கண்ட் ஆளுநர் சையது அகமது, பிகார் ஆளுநர் டி.ஒய்.பாட்டீல், உத்தரகாண்ட் ஆளுநர் அஜிஸ் குரேஷி, குஜராத் ஆளுநர் கமலா பெனிவால் ஆகியோர் பாஜக மாற்றம் செய்ய உள்ள ஆளுநர் பட்டியலில் உள்ளனர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு இடைஞ்சல்..
அதே நேரம் மத்தியில் வேறு ஆட்சி வந்துவிட்டதாலேயே, சொந்த காரணங்களுக்காக ஆளுநரை மாற்றக்கூடாது என்று வழக்கு ஒன்றில் 2010ம் ஆண்டு உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதையும் சட்ட வல்லுநர்களுடன் ஆய்வு செய்து வருவதாக பாஜக தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications