பீஃப் சாப்பிட்டால் கழுத்தை அறுங்கள்.. சாத்வி சரஸ்வதி சர்ச்சை.. பீஃப் சமைத்து அனுப்பும் மலையாளிகள்
சானதன தர்ம பிரச்சார சேவா சமிதியின் தலைவர் சாத்வி சரஸ்வதி என்ற பெண், கேரளாவில் மாட்டுக்கறிக்கு எதிராக பேசி பெரிய பிரச்சனையில் சிக்கியுள்ளார்.
திருவனந்தபுரம்: சானதன தர்ம பிரச்சார சேவா சமிதியின் தலைவர் சாத்வி சரஸ்வதி என்ற பெண், கேரளாவில் மாட்டுக்கறிக்கு எதிராக பேசி பெரிய பிரச்சனையில் சிக்கியுள்ளார். அவருக்கு கேரளா மக்கள் எல்லோரும் மாட்டுக்கறி உணவுகளை சமைத்து புகைப்படம் எடுத்து அனுப்பி வருகிறார்கள்.
கேரளாவில், காசர்கோட்டில் நடந்த இந்துத்துவா நிகழ்வு ஒன்றில் பேசிய சாத்வி, கேரளா மக்கள் மாட்டுக்கறி உண்ண கூடாது, அப்படி சாப்பிடும் நபர்களை நாட்டைவிட்டு வெளியே அனுப்ப வேண்டும். அவர்களின் கழுத்தை அறுக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார். ஆனால் இவரது பேச்சு பார்த்து, மலையாளிகள் அவரை கிண்டல் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
அவரது பேஸ்புக் பக்கத்தில் வரிசையாக மாட்டுக்கறி உணவுகளை அனுப்பி சாப்பிடுங்கள் நன்றாக இருக்கும் என்று கூறி கிண்டல் செய்து கொண்டு இருக்கிறார்கள். இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் அவர் திணறி வருகிறார்.

மாநிலஉணவு
இவர் ''மாட்டுக்கறி வறுவலும் பரோட்டாவும்தான் எங்களின் தேசிய உணவு. நீங்கள் எங்களின் கழுத்தை வெட்ட வேண்டுமா? வடஇந்தியர்கள்தான் பாஜகவையும், ஆர்எஸ்எஸையும் பார்த்து பயப்படுவார்கள், இது இடதுசாரிகளின் கேரளா. ஆர்எஸ்எஸ் எல்லாம் இங்கே தினமும் காமெடி செய்வார்கள், நாங்கள் சிரிப்போம் அவர்களை பார்த்து'' என்று மாட்டுக்கறி புகைப்படத்தை அனுப்பி உள்ளார்கள்.

பரோட்டோ காம்பினேஷன்
இந்த பெண் ''நீங்கள் இதற்கு முன் பரோட்டாவுடன் மாட்டுக்கறி சாப்பிட்டு இருக்கிறீர்களா? மிகவும் நன்றாக சுவையாக இருக்கும்'' என்று போட்டோ அனுப்பி இருக்கிறார்.

பாஜக கட்சியில கூட இருக்காங்க
இவர் கேராளவை சேர்ந்த பாஜக கட்சியின் முக்கிய உறுப்பினரான எம்டி ரமேஷ் மாட்டுக்கறி சாப்பிடும் பிரபலமான புகைப்படத்தை வெளியிட்டு கிண்டல் செய்து இருக்கிறார்.

எங்ககிட்டயேவா
இவர் ''நீங்கள் இப்போதுதான் முதல்முறையாக இப்படி கேரளாவிற்கு எதிராக பேசுகிறீர்கள் என்று நினைக்கிறேன். இப்போது உங்களுக்கு மலையாளிகளின் பலம் தெரிந்து இருக்கும். வேற்றுமையில் ஒற்றுமைதான் எங்கள் குறிக்கோள்.'' என்றுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications