ஊழலில் திளைத்துள்ள முதல்வர், அமைச்சர்களை தெறிக்க விட்ட மோடிக்கு நன்றி... சசிகலா புஷ்பா விளாசல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: வருமான வரித்துறை சோதனையின் மூலம் ஊழலில் திளைத்துள்ள தமிழக முதல்வரையும், அமைச்சர்களையும் தெறிக்கவிட்ட பிரதமர் மோடிக்கு எம்.பி. சசிகலா புஷ்பா நன்றி தெரிவித்தார்.

அதிமுக இணைப்பு குறித்து ஓ.பன்னீர் செல்வமும், தம்பிதுரையும் பரஸ்பரம் பச்சைக் கொடி காட்டினர். இந்நிலையில் நேற்றிரவு அமைச்சர் தங்கமணி வீட்டில் 20 அமைச்சர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில் சசிகலா, தினகரன் கோஷ்டி கட்சிப் பதவியில் இருக்கும் வரை பேச்சுவார்த்தை நடத்த இயலாது என்று ஓ.பன்னீர் செல்வம் திட்டவட்டமாக தெரிவித்தார்.

சசிகலா அணியினர் கண்டனம்

சசிகலா அணியினர் கண்டனம்

இவரது கருத்துக்கு சசிகலா அணியைச் சேர்ந்த எம்எல்ஏ வெற்றி வேல் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, தங்கள் அணிக்கு யாரிடமும் மண்டியிட வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார். ஓபிஎஸ், சசிகலா அணியினரின் பிடிவாததால் அதிமுக இணைவதில் இழுபறி நிலவுகிறது.

வஞ்சித்து விட்டார்

வஞ்சித்து விட்டார்

இந்நிலையில் ஓபிஎஸ் அணியினரின் செயல்பாட்டை கண்டித்து எம்.பி. சசிகலா புஷ்பா டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஓபிஎஸ்ஸை நம்பி சென்ற மக்களுக்கு அவர் உச்சக்கட்ட துரோகத்தை இழைத்துவிட்டார். வஞ்சித்து விட்டார். பின்னர் சசிகலா அன்ட் கோ இல்லாத அதிமுக இருந்தால் இணைவது என்கிறாஅடையாளம் காட்ட முடியுமா. எனவே இது முழுக்க அவர் செய்யும் நாடகம்.

மோடிக்கு நன்றி

மோடிக்கு நன்றி

தமிழகத்தில் வருமான வரித்துறையினர் மூலம் சோதனை நடத்த பிரதமர் மோடி உத்தரவிட்டதால் ஊழலில் ஊறிய முதல்வர், அமைச்சர்கள் தலைதெறிக்க ஓடுகின்றனர். எனவே மோடிக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுகவின் இரு அணிகளும் அடிக்கும் கூத்தை பார்த்து அண்டைய மாநிலங்களும், நாடுகளும் காரி உமிழ்கின்றன.

விஜயபாஸ்கரை எப்போது கைது

விஜயபாஸ்கரை எப்போது கைது

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரூ.89 கோடி பணமும், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. குற்றச்சாட்டுகள் உறுதியான நிலையில் அவரை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஓபிஎஸ் மீது மக்களின் நம்பிக்கை அத்துவிட்டது. விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக டெல்லியில் பிரதமரை சந்திக்காமல் கடிதம் எழுதி கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர்.

பதவிசுகம்

பதவிசுகம்

ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தபோது சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது அதை முன்மொழிந்து விட்டு தற்போது கூப்பாடு போடுவது ஏன். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது முதல்வராக இருந்த ஓபிஎஸ் அப்போது வாய் திறக்கவில்லை. பதவி இருந்தால் சசிகலா அன்ட் கோ நல்லவர்கள், பதவியை பறித்துவிட்டால் அவர்கள் ஊழல்வாதிகளா.

என்னுடைய நிலைப்பாடு

என்னுடைய நிலைப்பாடு

அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைந்தாலும் சரி, ஒன்றிணையா விட்டாலும் சரி என்னுடைய நிலைப்பாடு ஆரம்பத்தில் நான் எடுத்ததே இருக்கும். ஒரு வேளை நம்பிக்கைக்குரிய தலைவரோ தலைவியோ அதிமுகவுக்கு வந்தால் என்னுடைய நிலைப்பாடு மாறலாம் என்றார் சசிகலா புஷ்பா.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sasikala Pushpa condemns OPS to join with Sasikala team. The former also thanked Modi to order Income tax Raid in Tamil Nadu.
Please Wait while comments are loading...